பொதுவாக நாம் நிகழ்வுகளில் பொட்டுக்கடலை, கற்கண்டு பார்த்துருப்போம்.

அதிலிருக்கும் பொட்டுகடலையை உணவுடன் சேர்த்துக் கொள்ளும் போது உடல் எடை அதிகரிக்கும் என்பது நம்மால் நம்ப முடிகிறதா?

ஆமாம்,பொட்டுக்கடலையில் அதிகளவு புரதம் மற்றும் வைட்டமின் சத்துகள் நிறைத்திருக்கின்றன. இது எடை அதிகரிப்பிற்கு உதவுகிறது.

அந்த வகையில் உடலின் எடை அதிகரிப்பிற்கு எவ்வாறு பொட்டுக்கடலை உதவுகிறது என்பது குறித்து தெரிந்துக் கொள்வோம்.

உடல் மெலிந்து இருக்கீங்களா? கவலை வேண்டாம்: இது உங்களுக்கான டிப்ஸ் | Weight Gain Tips In Tamil

பொட்டுக்கடலையில் அதிகளவு புரதம் மற்றும் வைட்டமின் சத்துகள் நிறைந்துள்ளன, உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் இதனை உணவுடன் சேர்த்துக் கொண்டால் உடலுள்ள எலும்புகள், நரம்புகள், தசைகள் வலுப்பெறுகிறது.

அதிக வேலை செய்பவர்கள் இந்த கடலை சாப்பிடுவதால் உடலுக்கு சக்தி கிடைக்கிறது.

மேலும் உடலினுள் இருக்கும் கெட்ட கொழுப்புக்கள் கரைக்கப்படுகிறது. நமது உடல் இயங்குவதற்கு நரம்பு தொகுதி ஆரோக்கியமாக இருப்பது அவசியம்.

உடல் மெலிந்து இருக்கீங்களா? கவலை வேண்டாம்: இது உங்களுக்கான டிப்ஸ் | Weight Gain Tips In Tamil

உடைத்த கடலை பருப்பை சாப்பிட்டு வந்தால் இதிலுள்ள புரதங்கள் மற்றும் இதர சத்துக்கள் நரம்பு சம்பந்தமான பாதிப்புகள் குறைக்கிறது. இந்த கடலை செரிமான பிரச்சினைகளையும் சரிக் செய்கிறது.

இதில் செரிமானத்திற்கு தேவையான நார்ச்சத்துக்கள் அதிகளவுக் காணப்படுகிறது. கர்ப்பமாக இருப்பவர்கள் இந்த கடலை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். இது குழந்தைகள் வளர்ச்சியடைவதற்கு வழிவகுக்கிறது.

இது உடலிலுள்ள சக்கரையின் அளவைக் கட்டுபாட்டிற்குள் வைக்கிறது. இதனால் நீரழிவு நோயாளர்கள் இதனை அதிகம் சாப்பிடுவார்கள்.