பிரித்தானியா விமான நிலையங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று அரசின் புதிய விதியின் கீழ் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் விமான சேவைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது கொரோனாவின் பாதிப்பு மெல்ல, மெல்ல குறைந்து வருவதால், ஒரு சில நாடுகளில் உள்நாட்டு விமான சேவைகள் இயங்க துவங்கியுள்ளது.
இருப்பினும் பிரித்தானியாவில் கொரோனாவின் ஆரம்ப காலக்கட்டத்தில், போக்குவரத்து சேவைக்கு அரசு கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரவில்லை.
குறிப்பாக விமான போக்குவரத்தின் போது, வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை சரியாக பரிசோதிக்க வில்லை, விமான சேவைகள் தடை செய்யப்பட்டவில்லை, இதுவே நாட்டில் கொரோனாவால் அதிகம் பாதிப்பிற்கும், உயிரிழப்பிற்கும் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், பிரித்தானியாவில் இருக்கும் விமானநிலையங்களில், பயணிகள் கொண்டு வரும் கை சாமன்கள்( hand luggage) கட்டாயம் பரிசோதிக்கப்படுவதுடன், முகக்கசவங்கள் எல்லா நேரங்களிலும் அணிய வேண்டும் என்று அரசின் புதிய விதியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸின் பரவலை தடுப்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய விதியின் கீழ், மக்கள் முடிந்த வரை விமானத்திலே அமர்ந்திருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் அத்தியாவசிய பயணம் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
போக்குவரத்து செயலாளர், Grant Shapps, இன்றைய புதிய விதிகளின் வழிகாட்டுதல் பாதுகாப்பான மற்றும் நிலையான விமானத் துறையை உறுதி செய்வதற்கான சாதகமான அடுத்த படியாகும்.
அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களையும் தவிர்ப்பதற்கு அரசாங்கத்தின் ஆலோசனை தற்போது உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த வாரம் முதல் பிரித்தானியாவிற்கு வரும் அனைவரையும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்ற விதியை அரசு கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.