குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது ராசியை மாற்றும் ஒன்பது கிரகங்களில் செவ்வாய் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது. இவர் தன்னம்பிக்கை, தைரியம், செறிவு போன்றவற்றின் அடையாளமாக கருதப்படுகிறார்.
இவ்வாறான நிலையில் செவ்வாயின் ராசி மாற்றம் அனைத்து ராசியினரையும் பாதிக்கிறது. கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி செவ்வாய் கடக ராசியில் நுழைந்துள்ளது.
இந்த நேரம் மீனத்தில் ராகு இருக்கிறது. இதன் காரணமாக நவபஞ்சம் என்ற ராஜயோகம் உருவாகிறது. இதன் காரணமாக சில ராசிகள் சக்டத்தையும் கஷ்டத்தையும் சந்திக்க நேரிடும். அவை எந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
- ராகு-செவ்வாயின் நவபஞ்சம யோகம் மிகவும் உங்களுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
- இந்த நேரத்தில் நீங்கள் பொறுமையை இழந்து எரிச்சலடைவீாகள்.
- ஏதாவது வருமான ஆதாரங்களில் தடங்கல் ஏற்படலாம் .
- உங்களுக்கு சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
- பணியிடத்தில் அழுத்தம் அதிகரிக்கும்.வியாபாரத்தில் நஷ்டம் வரலாம், வாடிக்கையாளர்களுடன் சச்சரவுகள் வரலாம்.
- வயிகம் சம்மந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு நஷ்டம் ஏற்படும்.
- காதல் திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது.
விருட்சிகம்
- உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் ராகு-செவ்வாய் இணைந்துள்ளதால் அதிக சிரமம் வந்த சேரும்.
- உங்களுக்கு கோபமும் ஆக்ரோஷமும் அதிகரிக்கலாம். எதற்கெடுத்தாலும் சந்தேகப்படவீர்கள்.
- திடீர் செலவுகள் கூடும் மற்றும் பண இழப்புக்கள் ஏற்படலாம்.மேலதிகாரியுடன் தகராறு ஏற்படலாம்.
- வியாபாரத்தில் நஷ்டம் வரலாம் எனவே புதிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும்.
- பயணத்தின் போது விபத்து, பண இழப்பு ஏற்படலாம். திருமண வாழ்க்கையில் விவாகரத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மீனம்
- மீன ராசிக்காரர்களுக்கு ராகு-செவ்வாய் ஒன்பதாமிடத்தின் சேர்க்கை ஒரு பெரிய இழப்பை தரப்போகிறது.
- குழப்பம் மற்றும் நம்பிக்கையின்மை இருக்கும்.
- எதிர்மறை எண்ணங்கள் உங்களில் ஆதிக்கம் செலுத்தலாம்.
- புதிய வருமான ஆதாரங்களை ஏற்படுத்துவது கடினமாக இருக்கும்.
- வேலையில் பாதுகாப்பின்மை உணர்வு அதிகரிக்கும். வியாபாரத்தில் பல தடைகள் வரும்.
- காதல் உறவுகளில் உறுதியற்ற தன்மை இருக்கலாம், உறவுகளும் முறிந்து போகலாம்.