பொதுவாகவே நம்மில் பலரும் தினசரி சமைக்கப்படும் உணவு ஊட்டச்சத்து நிறைந்ததா என்பதில் காட்டும் அக்கறையை நாம் சமைக்கும் பாத்திரம் உடல் நலத்துக்கு உகந்ததா என்பதில் காட்டுவது கிடையாது.
இன்றைய நவீன யுகத்தில் அனைத்துமே நவீன மயமாக்கப்பட்டு விட்டது. நாமும் இலகுவாக இருக்கிறதா என மட்டுமே யோசிக்கின்றோமே தவிர அது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உகந்ததா என சிந்திப்பது கிடையாது.
மண் பாத்திரங்களில் இவ்வளவு நன்மையா? சமையலறையில் குக்கரில் தொடங்கி, கடாய், தவா, பால் பாத்திரம் என நான்ஸ்டிக் பொருட்கள் நிறைந்து விட்டன. இதனால் ஏற்படும் பாதக விளைவு குறித்து பலரும் அறியாமையிலேயே இருக்கின்றோம்.
நமது முன்னோர்கள் செய்த ஒவ்வொரு விடயமும் அறிவியயல் சாந்ததே. அறிவியல் வளர்ச்சி துளிகூட இல்லாமல் எப்படி அவர்களால் இவற்றை எளிதாக சொல்ல முடிந்தது என்பது சிந்தித்தால் வியப்பாகத்தான் இருக்கும்.
நமது முன்னோர்கள் பெரும்பாலும் சமயலுக்கு மண்பாத்திரங்களை பயன்படுத்தினார்கள். இதில் சமைக்கும்போது உணவின் மீது வெப்பம் மெதுவாக, ஒரே சீராகப் பரவுவதனால் உணவை சரியான வெப்பநிலையில் சமைக்க முடியும்.
மேலும், மண் பாத்திரங்களில் உள்ள நுண்துளைகள் மூலம் நீராவியும், காற்றும் உணவில் ஊடுருவுவதால் சரியான பதத்தில் வைட்டமின்களும் கணியுப்புக்களும் அழிவடையாத வகையில் சமைக்க முடியும்.
இதனால் மண் பாத்திரங்களில் சமைக்கப்பட்ட உணவு பல மணி நேரம் வரை கெடாமல் இருக்கும். மண் பாத்திரத்தில் சமைக்கும்போது அதிக எண்ணெய் பயன்படுத்தத் தேவை இல்லை. உணவில் உள்ள அமிலத்தன்மையைச் சமப்படுத்தும்.
உப்பு, புளிப்புச் சுவையுள்ள உணவுகளைச் சமைக்கும் போது, உலோக பாத்திரங்களாக இருக்கும் பட்சத்தில் புளி மற்றும் உப்பில் காணப்படும் அமிலம் காரம் ஆகியன உலோகத்துடன் தாக்கம் புரிந்து தீங்கான விளைவுகள் ஏற்படக் கூடும், ஆனால் மண் பாத்திரத்தில் இவ்வாறு தாக்கம் இடம்பெறாது. பல காலமாக சமையல் பாத்திரங்கள் செய்யப் பயன்படுத்தப்பட்டு வரும் இரும்பு, சமையலுக்கு ஏற்றது.
இதில், சமைக்கும்போது வெப்பம் சீராகப் பரவுவதோடு, நீண்ட நேரம் வெப்பத்தைத் தக்கவைத்துக்கொள்ளும்.
உடல் ஆரோக்கியத்துக்கு எந்த வகையிலும் தீங்கு விளைவிக்காது என்பதனாலேயே சமையலுக்கு தொன்று தொட்டு மண் பாத்திரங்கள் சிறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது அறிவியல் ரீதியாகவும் நிரூபிக்கப்பட்ட உண்மை.