ஒவ்வொரு நாளும் நாம் பல வகையான உணவுகளை உட்கொள்கிறோம். அவ்வாறு நாம் உண்ணும் உணவுகள் ஆரோக்கியத்தை தந்தாலும், அவை பல வகையான நோய்களுடன் தொடர்புபட்டு இருக்கின்றன.

அப்படியான நோய்களில் கொலஸ்ட்ரால் நோயும் ஒன்றாகும். கொலஸ்ட்ராலில் நல்ல கொலஸ்ட்ரால், கெட்ட கொலஸ்ட்ரால் என இரு வகைகள் உள்ளன. உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்புகளை HDL கொழுப்பு என்று கூறப்படுகின்றது.

தேவைப்படாத கொழுப்புகளான LDL கொழுப்புகள் ரத்த குழாயில் படியும் செயற்பாடு கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும். இதை எப்படி கட்டுப்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்?மருத்துவ விளக்கம் | Cholesterol Inhibiting Mechanisms Health Tipsஇந்த கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த நாம் உண்ணும் உணவில் கவனமாக இருக்க வேண்டும். அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் இறைச்சிகள் உட்பட பல்வேறு சத்தான உணவுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 

துரித உணவுகளை உண்ண கூடாது. பொதுவாக இந்த நோய் அதிக எடையுடன் இருப்பவர்களுக்கே வருகின்றது. உடலில் நல்ல கொழுப்பு இருப்பது அவசியம் ஆனால் கெட்ட கொழுப்பு ரத்த ஓட்டத்தை முற்றாக இல்லாமல் செய்யும் இதனால் தான் கெட்ட கொழுப்பை குறைக்க ஆலோசனை கேட்பதற்கு மருத்துவரை நாட வேண்டும்.

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்?மருத்துவ விளக்கம் | Cholesterol Inhibiting Mechanisms Health Tipsஇந்த நோய் இருப்பவர்களுக்கு இதய நோய் இருக்க கூடாது. இது வளர்சிதை மாற்ற நோய் உள்ளவர்களுக்கு மிகவும் ஆபத்தை தரும். இந்த நோய் இருப்பவர்கள் கட்டாயமாக உடற்பயிற்ச்சி திட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.

புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் அதை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியமாகும். தானியங்களுள் ஒன்றான பார்லியில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், இதனை உண்டால், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அதிகரிப்பது தடைபடுவதோடு, கொலஸ்ட்ராலும் கரைந்து விடும்.

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்?மருத்துவ விளக்கம் | Cholesterol Inhibiting Mechanisms Health Tipsகத்திரிக்காயில் கலோரிகள் மிகவும் குறைவு இதை சாப்பிடுவது நன்மை தரும். இதனால் உடலில் உள்ள கொலஸ்ரால் உறிஞ்சப்படும். மீன்களில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால், மீன்களை அதிகம் உட்கொண்டால், கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் சேர்வதை தவிர்க்கலாம்.

ஆகவே மீன்களில் சால்மன் மற்றும் டூனா போன்றவற்றை சாப்பிட்டு, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறையுங்கள். ஆப்பிள்களில் வைட்டமின் `சி’ மற்றும் பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது.

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்?மருத்துவ விளக்கம் | Cholesterol Inhibiting Mechanisms Health Tipsஎனவே தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை எளிதில் குறைக்கலாம். இது போன்ற விஷயங்களில் கண்ணாக இருந்து செயற்பட்டால் கொலஸ்ட்ரால் அளவு மிகக்குறையும்.