பூமியில் உள்ள உயிர்கள் இன்னும் 250 மில்லியன் ஆண்டுகளில் அழிந்துவிடும் என பிரித்தானியாவில் உள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகம் நடாத்திய ஆய்வு ஒன்றில் மூலம் தெரியவந்துள்ளது.

பிரிஸ்டல் பல்கலைக்கழகம் கணினி தரவுகளைப் பயன்படுத்தி மேற்கொண்ட கணக்கீடுகளின்படி,

பூமி அழியப் போகின்றதா? ஆய்வு ஒன்றில் வெளியான திடுக்கிடும் தகவல்! | Earth Will Be Extinct In 250 Million Years Bristolகுறித்த நேரத்தில் அனைத்து பாலூட்டிகளையும் அழிக்கும் ஒரு வெகுஜன அழிவை பூமி எதிர்கொள்ளும் என்று தெரியவந்துள்ளது.

அந்த காலகட்டத்தில், பூமியில் அனைத்து உயிரினமும் 40 முதல் 70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், பூமியின் அனைத்துக் கண்டங்களும் ஒன்றாகச் சேர்ந்து வெப்பமான, வறண்ட மற்றும் பெரும்பாலும் வாழத் தகுதியற்ற “Pangaea Ultima” என்று அழைக்கப்படும் சூப்பர் கண்டத்தை உருவாக்கும் என்று பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.  

பூமி அழியப் போகின்றதா? ஆய்வு ஒன்றில் வெளியான திடுக்கிடும் தகவல்! | Earth Will Be Extinct In 250 Million Years Bristol

மேலும், இந்த நிமிடத்தில் இருந்து படிம எரிபொருட்களை எரிப்பதை நிறுத்தினாலும் இந்த நிலை உருவாகும் என தெரியவந்துள்ளது.

இதேவெளை, 66 மில்லியன் வருடங்களுக்கு முன்பு பூமியில் பாரிய விண்வெளிப் பாறை மோதியதில் டைனோசர்கள் அழிந்த பிறகு இதுவே முதல் அழிவாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.