பொதுவாக இவ்வுலகில் ஒருவருக்கு எத்தனை உறவுகள் இருந்தாலும் அம்மா என்ற ஒற்றை உறவுக்கு நிச்சயம் ஈடாகவே முடியாது.
சுயநலம் நிறைந்த உலகில் தன் குழந்தைக்காக எதையும் இழக்க தயாராக இருப்பது அம்மா மட்டுமே. அம்மா என்றாலே சிறப்பு தான்.
வயதான பின்னரே வாழ்க்கை துணையை தேடும் ராசிகள்... ஏன்னு தெரியுமா?
ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் தாய்மைக்குரிய அத்தனை அம்சங்களையும் பிறப்பிலேயே கொண்டிருப்பார்கள்.அப்படி தலைசிறந்த தாயாக மாறும் பெண் ராசிகள் எவையென இந்த பதிவில் பார்க்கலாம்.
மீனம்
மீனம் ராசிக்காரர்கள் இயல்பாகவே மிகுந்த கருணை உள்ளம் கொண்டவர்களாகவும் மற்றவர்கள் மீது இரக்கப்படுவதற்கும் உதவி செய்வதற்கும் பெயர் பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.
இந்த ராசியில் பிறந்த பெண்கள் ஒரு அம்மாவாக மாறும் போது, குழந்தைகளை உணர்திறன் மிக்கவர்களாகவும், கற்பனைத் திறன் கொண்டவர்களாகவும், மற்றவர்களை கருணையுடனும் நடத்துபவர்களாகவும் வளர்ப்பார்கள்.
மனிதர்கள் மீது அன்பு செலுத்த சிறுவயதில் இருந்தே குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதில் இந்த ராசி பெண்கள் கில்லாடிகளாக இருப்பார்கள். இவர்கள் குழந்தைகளை பொறுப்புள்ளவர்களாக வளர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்த பெண்கள் இயல்பாகவே நிர்வாக திறமை அதிகம் கொண்டவர்களாக இருப்பதால், இவர்கள் ஒரு தயாகவும் தங்களின் கடமைகளையும் பொறுப்புக்களையும் சரியாக நிறைவேற்ற வேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டுவார்கள்.
இவர்கள் குழந்தைகள் சாகசக்காரர்களாகவும், புதிய விஷயங்களை முயற்சிப்பதில் வெட்கப்படாமலும் இருக்க வேண்டும் என கற்றுக்கொடுத்து வளர்ப்பார்கள். இவர்கள் குழந்தைகளுக்கு அம்மாவாக மட்டுமன்றி சிறந்ம தோழியாகவும் இருக்கின்றார்கள்.
இந்த ராசி பெண்களை தயாக பெற்றவர்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். இவர்கள் குழந்தைகளுக்காக எவ்வளவு பெரிய தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பார்கள்.
மிதுனம்
மிதுனம் ராசி அம்மாக்கள் தங்கள் குழந்தைகளிடம் எதையும் பற்றி எப்படி பேச வேண்டும் என்ற உளவியலை அறிந்தவர்களாக இருப்பார்கள். இந்த ராசி அம்மாக்கள் குழந்கைகளுக்கு ஒரு தோழியாகவே இருக்கின்றார்கள்.
அவர்களின் சரியான அணுகுமுறையால் மிதுனம் ராசி அம்மாக்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் இடையில் எந்த ரகசியங்களும் இருக்காது.
இவர்கள் கண்டிக்க வேண்டிய இடத்தில் குழந்தைகளுடன் எப்படியான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்ற கலையை நன்கு அறிந்தவர்களாக இருப்பார்கள். குழந்தைகளை கையாளுவதில் இவர்கள் தனித்துவமான திறமை கொண்டவர்களாக இருப்பார்கள்.