பொதுவாக எல்லா ஆண்களுமே தனக்கு வாழ்க்கை துணையாக அமையும் பெண் உண்மையானவளாகவும் தனக்கு நேர்மையாக நடந்துக்கொள்ளும் குணம் கொண்டவராகவும் இருக்க வேண்டும் என நினைப்பது இயல்பு.
ஆசைப்படும் எல்லோருக்குமே அவ்வாறான துணை அமைவது கிடையாது. ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் இயல்பாகவே உண்மைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.

அந்தவகையில் 12 ராசிகளில் ஆண்களை காதல் என்ற பெயரில் ஒருபோதும் ஏமாற்றாத பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கும்பம்

நீதியின் கடவுளாகிய சனிபகவானால் ஆளப்படும் கும்ப ராசி பெண்கள் வாழ்க்யில் யாரையும் ஏமாற்றிவிடவே கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
இவர்கள் காதலில் மாத்திரமன்றி எந்த விடயத்திலும் யாக்கும் துரோகம் செய்ய மாட்டார்கள். தங்களுக்கு துரோகம் செய்தவர்களுக்கு கூட இந்த பெண்கள் மன்னிப்பை பரிசளிக்கும் விசுவாசிகளாக இருப்பார்கள்.
ஆனால் அவர்களுக்கு, இது ஒரு பழக்கம் மட்டுமே. அவர்கள் பெரும்பாலும் வலுவான சுதந்திரத்தையும் வழக்கத்திற்கு மாறான நடத்தையையும் வெளிப்படுத்துகிறார்கள்.சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இவர்களிடம் வலுவாக இருக்கும்.
மீனம்

மீன ராசியில் பிறந்த பெண்கள் மிகவும் இரக்க குணம் கொண்டவர்களாக அறியப்படுகின்றது. இவர்கள் மற்றவர்களை மனதளவில் ஒருபோதும் காயப்படுத்தவே மாட்டார்கள்.
உணர்திறன் மற்றும் பச்சாதாபம் கொண்டவர்களாக அறியப்படுகிறார்கள், மற்றவர்களின் பிரச்சினைகளையும், உணர்வுகளையும் சொல்லாமலேயே புரிந்துக்கொள்ளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
தங்களை வருத்திக்கொண்டு மற்றவர்களுக்கு நன்மை செய்ய நினைக்கும் குணம் கொண்ட இவர்கள் வாழ்வில் ஒருபோதும், துணைக்கு துரோகம் செய்ய மாட்டார்கள்.
ரிஷபம்

காதலின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசி பெண்கள் காதல் மீதும் திருமணத்தின் மீதும் இயல்பிலேயே மதிப்பும் மரியாதையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் காதல் வாழ்க்கையில் எல்லா விடயங்களுக்கு விட்டுக்கொடுத்துப்போகும் தன்மையுடையவர்களானவும், துணையின் மகிழ்ச்சிக்காக தங்களின் ஆசைகளை விட்டுக்கொடுக்கக்கூடியவர்களாகவும் இருப்பார்கள்.
ஆனால் ஒருபோதும் துணைக்கு துரோகம் செய்யும் சிறிய விடயங்களில் கூட ஈடுபடவே மாட்டார்கள். இவர்கள் விசுவாசத்தின் மறு உருவமாக இருப்பார்கள். ஏமாற்றுவது என்பது இவர்களின் அகராதியில் கிடையாது.
