பொதுவாக பெண்கள் சில ஹார்மோன்ஸ் கோளாறு காரணமாக குறிப்பிட்ட வயதிற்கு மேல் தலைமுடி பிரச்சினையால் அவஸ்தைப்படுவார்கள்.
தலைமுடி மற்றும் சரும பராமரிப்பில் அத்தியாவசிய எண்ணெய்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
அந்த வகையில் தலைமுடி பிரச்சினையுள்ளவர்கள் ஜோஜோபா எண்ணெயை தலைக்கு பயன்படுத்தலாம். இந்த எண்ணெய் இருக்கும் சில பதார்த்தங்கள் கூந்தலுக்கு ஊட்டமளித்து மென்மையாக பாதுகாக்கும்.
இதன்படி, ஜோஜோபா எண்ணெய் ஏன் தலைக்கு பயன்படுகிறார்கள்? அதனால் என்னென்ன நன்மைகள்? என்பதனை தெளிவாக பார்க்கலாம்.
ஜோஜோபா என்பது சிகிச்சை தாவரமாக பார்க்கப்படுகின்றது. இது அனைத்து நாடுகளிலும் இருக்கின்றது. இந்த தாவரத்தை கொண்டு காயங்கள், தொண்டை புண், உடல் பருமன் மற்றும் புற்றுநோய் ஆகிய நோய்களுக்கு தீர்வு காண முடியும்.
மேலும் முகப்பரு எதிர்ப்பு மற்றும் சொரியாசிஸ், அழற்சி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு, ஆண்டிபிரைடிக், வலி நிவாரணி, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் இரத்தச் சர்க்கரை ஆகிய நோய்களுக்கும் இந்த தாவரத்திலிருந்து மருந்து பெறப்படுகின்றது என கூறப்படுகின்றது.
1. ஜோஜோபா எண்ணெயில் ஒலிக் மற்றும் பெஹெனிக் அமிலங்கள் இருக்கின்றன. இது தலைமுடி வேர்களை ஊக்கப்படுத்தி உதிர்வை கட்டுபடுத்துகின்றது.
2. தலைமுடி பிரச்சினையுள்ளவர்கள் ஜோஜோபா எண்ணெயில் பயன்படுத்துவதால் ஏகப்பட்ட நன்மைகள் இருக்கின்றன. ஏனெனின் எண்ணெயில் தாமிரம் மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் பி, சி மற்றும் ஈ ஆகிய ஊட்டச்சத்துக்கள் ஒழிந்திருக்கின்றன.
3. பொடுகு பிரச்சினையுள்ளவர்கள் இந்த எண்ணெயை தலையில் வைக்க வேண்டும். இதனால் உங்கள் தலையிலுள்ள pH சமநிலை மீட்டெடுக்கப்படும்.