ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகாலம் தங்கும் சனிபகவான் 12 ராசிகளையும் சுற்றி வர 30 ஆண்டுகாலம் எடுத்துக்கொள்கிறார். எனவேதான் 30 ஆண்டுகள் வாழ்ந்தாரும் இல்லை தாழ்ந்தாரும் இல்லை என்கின்ற முதுமொழி ஒன்றும் உண்டு.

சனி பகவான் நீதிமான் என்பதால் அவர் சோதனைதான் கொடுப்பார். தண்டனை என்ற பெயரில் புத்தி புகட்டுவார். சிலருக்கு கோடி கோடியாக கொடுப்பார். விபரீத ராஜயோகத்தையும் தருவார்.

Saturn transit benefit 2023அந்தவகையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் சனிபகவானால் 12 ராசிகளில் எந்த ராசிக்காரர்களுக்கு பதவி பட்டம், கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறார் என்று பார்க்கலாம்.

சனி பகவான் ஒருவரின் ராசிக்கு 3,5,6,9,10,11 ஆகிய இடங்களில் கோச்சார ரீதியாக சஞ்சரிக்கும் கால கட்டத்தில் சங்கடங்கள் இல்லாத சந்தோஷங்களைத் தருவார். ஏழரை சனி காலத்தில் சனிபகவான் விரையசனி, ஜென்மசனி, பாதசனி என படிப்பினைகள் கொடுப்பார்.சனி பெயர்ச்சி பலன் 2023; 30 ஆண்டுகளுக்குப் பின் தேடி வரும் கோடீஸ்வர யோகம்! | Saturn Transit 2023 Millionaire After 30 Yearsஅர்தாஷ்டம சனி, கண்டச்சனி, அஷ்டம சனி, என கஷ்டப்பட்டாலும் கடைசியில் நல்ல விசயங்களை கற்றுக்கொடுப்பார். சனிபகவான் கும்ப ராசியான தனது சொந்த வீட்டில் பயணம் செய்கிறார்.

இந்த சனி பெயர்ச்சியால் ஏழரைச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டம சனி, அஷ்டம சனியால் அவதிப்படபோகும் ராசிகள் யார்?  அதேபோல 12 ராசிகளிலும் கோடீஸ்வர யோகம், விபரீத ராஜயோகம் பெறும் ராசிக்காரர்கள் யார் யார் என பார்க்கலாம்.

சனி பெயர்ச்சி பலன் 2023; 30 ஆண்டுகளுக்குப் பின் தேடி வரும் கோடீஸ்வர யோகம்! | Saturn Transit 2023 Millionaire After 30 Years

மேஷம்:

லாப சனி மேஷ ராசிக்காரர்களுக்கு அள்ளித்தரப்போகிறார். செய்யும் தொழிலில் லாபமும், அபரிமிதமான வருமானமும் கிடைக்கும். சனிபகவான் பார்வை உங்க ராசியில் விழுவதும் கூடுதல் பலம்.

அரசியல்வாதிகளுக்கு சொல்வாக்கு உயரும். சிலர் விமானம் ஏறி வெளிநாடு செல்வீர்கள்.  உங்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடி வரும்.

ரிஷபம்:

பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் சனியால் சச யோகம் செயல்படும். இந்த ராசிக்கார அரசியல்வாதிகளுக்கு புது பதவி கிடைக்கும். சனியால் கொடுக்கும் பதவி, சொத்துக்களை யாராலும் அசைக்க முடியாது.

புதிய கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். கோடீஸ்வர யோகம் வரப்போகிறது. சனி கொடுப்பதை பத்திரமாக பாதுகாத்து தான தர்மங்கள் செய்யுங்கள்.

மிதுனம்:

அஷ்டம சனி முடிந்து பாக்கிய சனி தொடங்குகிறது. சனியால் யோகங்கள் அதிகம் கிடைக்கும். ஏனெனில் இது தர்ம சனி காலம். பதவியில் உயர்வு புரமோசன் கிடைக்கும்.  நிறைய தான தர்மங்களை செய்யுங்கள். கோடி கோடியாக கொட்டித்தரப்போகிறார் சனி பகவான்.

கடகம்:

எட்டாம் வீட்டு அதிபதி சனி எட்டில் ஆட்சி பெற்று அமர்வது விபரீத ராஜயோக காலமாகும். இந்த கால கட்டத்தில் சில பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் அவை உங்களுக்கு சாதகமாகவே முடியும். திடீர் பணவரவு கிடைக்கும்.

வரக்கூடிய பணத்தை கவனமாக கையாளுங்கள். பேராசை பெரு நஷ்டமாகிவிடும்.

சிம்மம்:

உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் கண்டச்சனியாக அமரப்போகிறார். சனியால் மிகப்பெரிய சச யோகம் தேடி வரப்போகிறது. சிம்ம ராசிக்கார அரசியல்வாதிகளுக்கு புகழ், செல்வம், செல்வாக்கு அதிகரிக்கும். பணம் பல வழிகளிலும் வரப்போகிறது. வீண் செலவுகளை தவிர்த்தால் சேமிக்கலாம்.

கன்னி:

சனி பகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்து முழு ராஜயோகத்தையும் தரப்போகிறார். சனி ஆறாம் வீட்டு அதிபதி ஆறில் ஆட்சி பெற்று அமர்ந்து விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார்.

கன்னி ராசியில் பிறந்த அரசியல்வாதிகளுக்கு இனி இரண்டரை ஆண்டு காலம் ராஜயோக காலம் செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும்.

துலாம்:

உங்களுக்கு துன்பங்களில் இருந்த விடிவுகாலம் பிறப்போகிறது. இந்த சனி பெயர்ச்சி பல நன்மைகளையும் யோகங்களையும் தரப்போகிறது. பணவரவு அதிகமாகவே இருக்கும். அரசியல்வாதிகளுக்கு இனி வளர்ச்சிதான். ஏற்றம் தரும் சனி பெயர்ச்சியாக அமைந்துள்ளது.

சனி பகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் தரப்போகிறார்.

விருச்சிகம்:

உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டு அதிபதி நான்கில் ஆட்சி பெற்று அமர்வதால் சச யோகம் தேடி வரப்போகிறது. இனி உங்களுக்கு நன்மைகள் அதிகம் நடைபெறப்போகிறது. ஆசைகளை குறிக்கோள்களை சனி பகவான் நிறைவேற்றுவார்.

விருச்சிக ராசியில் பிறந்த அரசியல்வாதிகளுக்கு பதவிகளும் பட்டங்களும் தேடி வரப்போகிறது.

தனுசு:

ஏழரை சனி உங்கள் ராசியை விட்டு விலகுவதால் எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறப்போகிறது. உங்கள் ராசிக்கு இருந்த பிரச்சினைகள் சிக்கல்கள் நீங்கப்போகிறது. காரியங்கள் வெற்றியை கொடுக்கும்.

இந்த ராசிக்கார அரசியல்வாதிகளுக்கு இதுநாள் வரை நஷ்டங்களை ஏற்படுத்திய சனி இனி லாபங்களைத் தருவார். பதவிகளும் பட்டங்களும் தேடி வரப்போகிறது. கோடி கோடியாக வரப்போகும் செல்வத்தை அனுபவிக்கத் தயாராகுங்கள்.

மகரம்:

ஏழரை சனியின் கடைசி இரண்டரை ஆண்டு காலம் பாத சனியாக தொடர்வதால் கொஞ்சம் கவனம் தேவை. இரண்டரை ஆண்டு காலங்கள் கஷ்டங்களைக் கடந்து விடுவீர்கள். உங்களின் புதிய பயணங்களால் நன்மைகள் அதிகரிக்கும்.

எவ்வளவோ பாத்துட்டோம் இதையும் ஒரு கை பார்த்துடுவோமே என்ற தெம்பு வந்து விடும். நிதானமாக அடி எடுத்து வைப்பது அவசியம்.

கும்பம்:

சனி பகவான் தன்னுடைய ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்கிறார். ஜென்ம சனி காலம் என்பதால் எதிலும் கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு பொறுப்பு அதிகரிக்கும். குருவின் பயணம் சாதகமாக இருப்பதால் நன்மைகள் அதிகம் நடைபெறும்.

உழைப்புக்கு முக்கியத்துவம் தருவீர்கள். அரசு தொடர்பான ஆதரவு கிடைக்கும். 2024ஆம் ஆண்டு முதல் பண விசயங்களில் கவனமும் நிதானமும் தேவைப்படும்.

மீனம்:

ஏழரை சனி ஆரம்பம் என்பதால் எதிலும் கவனமும் நிதானமும் தேவைப்படும். மீன ராசியில் பிறந்தவர்களுக்கு முதல் இரண்டரை ஆண்டுகள் விரைய சனி. இந்த கால கட்டத்தில் சனிபகவான் விபரீத ராஜயோகத்தையும் தருகிறார்.

அரசியல்வாதிகளுக்கு சனிபகவானின் சஞ்சாரம் சாதகமான பலன்களைத் தரப்போகிறது என்றாலும் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. இரண்டரை ஆண்டுகளுக்கு பேசும் வார்த்தைகளில் கவனமும் நிதானமும் தேவைப்படும்.