இன்று பலரும் தூக்கமின்மை பிரச்சினையால் அவதிப்படும் நிலையில், 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் என்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
இன்றைய டிஜிட்டல் உலகத்தில் தூக்கமின்மை பிரச்சினையை பலரும் எதிர்கொண்டு வருவதுடன், செலபோன் மோகம் அதிகரித்து தூங்கும் நேரத்தை தாமதப்படுத்துகின்றது.
இரவில் கண்விழித்தாலோ, அல்லது காலையில் தூங்கி எழுந்தாலோ செல்போனை மட்டுமே பார்க்கும் நிலையில், இதிலிருந்து வெளிவரும் ஒளி கண்களை சோர்வாக வைக்கின்றது.
இரவில் சரியான தூக்கம் இல்லாவிடில் காலையில் மிகவும் சோர்வாகவே காணப்படுவோம். இந்த தூக்க பாதிப்பு உடலில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.
மேலும் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், இதயநோய், பக்கவாதம் உட்பட்ட பிரச்சினைகள் வருவதாக ஆய்வுகள் கூறுகின்றது.
அதிலும் 6 மணிநேரத்திற்கு குறைவாக தூங்குபவர்கள், மேலே கூறப்பட்டுள்ள பிரச்சிகளுடன், சிறுநீரக பிரச்சினையையும் சந்திக்கின்றனர்.
தினமும் இரவில் 7 மணி முதல் 9 மணி நேரம் வரை தூங்குமாறு அமெரிக்க இதய சங்கம் பரிந்துரை செய்துள்ளது.
தூக்கத்தின் போது உடல் தன்னைத் தானே சரிசெய்து கொள்வதால், சிறு சிறு உடல் நலக் குறைபாடுகள் கூட நீங்கிவிடுமாம்.
ஒருவர் போதுமான நேரம் தூங்க முடியாமல் அவதிப்படும்போது உடல் அதிக மன அழுத்த ஹார்மோனை உற்பத்தி செய்வதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆழ்ந்த தூக்கத்தின் போது இதயம் மற்றும் ரத்த நாளங்கள் ஓய்வெடுக்க வழிவகை ஏற்படுவதுடன், மன அழுத்தம் குறைகின்றதாம்.