கொஹுவல பகுதியில் காரொன்றில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம், 33 வயது வர்த்தகருடையது என மரபணு பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்

வர்த்தகரின் பெற்றோர்களிடமிருந்து பெறப்பட்ட மரபணு மாதிரிகளைக் கொண்டு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொஹுவல, ஆசிரி மாவத்தையில் கடந்த 10 ஆம் திகதி  இரவு 11.30 மணியளவில் கார் ஒன்றினுள் எரியுண்ட நிலையில் குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் பிரேத பரிசோதனைகள் நாளை நடத்தப்படவுள்ளதுடன், அதன்பின்னர் மரணத்துக்கான காரணம் தெரியவரும் என்றும்  ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.