காலையில் வெறும் வயிற்றில் தேங்காய் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தற்போது குறித்த நன்மைகள் என்ன என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேங்காய் தண்ணீர் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவி செய்கின்றது. ஏனெனில் இது நல்ல எலக்ட்ரோலைட்டின் மூலமாக இருப்பதால், நம் உடம்பில் இரவு முழுவதும் தூங்கும் போது உடலில் தண்ணீர் இழக்கப்படுவதை, காலை வெறும் வயிற்றில் பருகினால் நீரேற்றமாக வைத்திருக்க முடியும்.

தேங்காய் தண்ணீரில் இயற்கையான சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் காணப்படுவதால் இவை உடம்பிற்கு ஆற்றல் கிடைக்கின்றது. 

மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சினையை தடுப்பதற்கு தேங்காய் தண்ணீர் உதவி செய்கின்றது.

வெறும் வயிற்றில் தேங்காய் தண்ணீர் குடிங்க... என்னென்ன நன்மை தெரியுமா? | Empty Stomach Coconut Water Drink Benefits

இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஃப்ரீரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து உடம்பை பாதுகாக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நோய்களை எதிர்த்து போராடவும் செய்கின்றது.

கலோரிகள் குறைவாக இருப்பதால், எடையைக் கட்டுப்படுத்த நினைப்பவர்களுக்கு நல்ல தேர்வாக தேங்காய் தண்ணீர் கிடைக்கின்றது.