மீம்ஸ்களின் மூலம் வைரலான சீம்ஸ் நாய் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளதால் இணையத்தளவாசிகள் சோகத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

ஷிபா இனு இனத்தின் வைரஸ் நாய் இணையத்தில் புயலை கிளப்பி மீம் ஐகானாக மாறிய நாய் தனது 12 வயதில் மார்பக அறுவை சிகிச்சையின் போது உயிரிழந்திருக்கிறது.

கடந்த இரண்டு வருடங்களாக புற்றுநோயால் அவதியுற்று வந்த சீம்ஸ் நாய் அறுவைசிகிச்சைக்குப் பிறகு கீமோதெரபி மற்றும் பிற சாத்தியமான சிகிச்சைக்கு உட்படுத்த திட்டமிடப்பட்டது, ஆனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சையின் போது இறந்துவிட்டார் என்று அவரது அதிகாரப்பூர்வ கணக்கின் இன்ஸ்டாகிராம் பதிவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரின் மறைவால் பழைய மீம்ஸ்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். உயிரிழந்த இந்த மீம்ஸ் நாய் சொர்க்கத்திற்கு செல்வதுபோல மீன்ஸ் பதிவிட்டு வருகிறார்கள்  

viral meme dog cheems death