நடிகை ராஷ்மிகா தான் காதலித்து நிச்சயதார்த்தம் முடிந்து திருமணம் வரை சென்று காதலனை பிரிந்ததற்கு இது தான் காரணம்.
தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி போன்ற சினிமாக்களில் கதாநாயகியாக நடித்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. 'கீதா கோவிந்தம்' திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.
மேலும், தமிழில் கார்த்தியுடன் ‘சுல்தான்’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அண்மையில் கூட தளபதி விஜய்க்கு ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார்.
மேலும், இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ் இருப்பவர்.
ராஷ்மிகாவிற்கு 2017ஆம் ஆண்டு நடிகர் ரக்ஷித் ஷெட்டி என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இவர்கள் இருவரும் திரைப்படம் ஒன்றில் நடித்ததன் மூலம் காதலிக்க ஆரம்பித்தார்கள்.
ஒரு வருடம் டேட்டிங் செய்து பிறகு தான் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டார்கள். ஆனால் திருமணம் வரை செல்லவில்லை. நிச்சயதார்த்தம் முடிந்து அடுத்த வருடமே இருவரும் பிரிந்து விட்டார்கள்.
காதலனை விட்டு ராஷ்மிகா தான் பிரிந்தார் என பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இணையத்தில் பல செய்திகள் வெளியாகி இருந்தது.
இவர்கள் இருவராலும் ஒன்றாக வாழ முடியாது என்ற பட்சத்தில் தான் பிரிந்தார்கள் என்று அவரது தாயார் சொல்லியிருந்தார். ஆனால் கீதா கேவிந்தம் திரைப்படம் ஹிட் அடித்ததால் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா அவரைக் காதலிப்பதாக வெளியான செய்தியால் தான் காதலனான ரக்ஷித்தை பிரேக் அப் செய்தார் என்று சொல்லப்படுகிறது.