தளபதி விஜய்யின் பிறந்தநாள் இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகைச் சேர்ந்த பல பிரமுகர்களும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தவர்களில் ஒருவர் சமீபத்தில் வெளியான ‘திரெளபதி’ படத்தை இயக்கி ஜி மோகன்.
இயக்குனர் ஜி மோகன் தனது சமூக வலைத்தளத்தில் விஜய்க்கு பிறந்த நாள் தெரிவித்த நிலையில் ஒரு விஜய் ரசிகர் ’தளபதி விஜய்யை வைத்து எப்போது படம் இயக்குவீர்கள்’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த இயக்குனர் ஜி மோகன் ’விஜய்க்காக கதை தயாராக இருப்பதாகவும், காலம் கனிந்து வரும் போது அது நிச்சயம் நடக்கும்’ என்றும் கூறினார்.
அதற்கு அந்த ரசிகர் ’நான் சும்மாதான் கேட்டேன். உடனே காலம் இருக்கு, கனி இருக்கு, கதை இருக்குன்னு சொல்லிகிட்டு இருக்கிங்க’ என்று கலாய்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து ஜி மோகன் கூறியதாவது ’நம்மிடம் கேள்வி கேட்பவர்களை சக மனிதனாக மதித்து இவ்வாறு பதில் கொடுத்தால் அதை வைத்து விளையாடும் கிறுக்கு புத்தி கொண்டவர்களால் தான், பலர் ஒரு குறும்படம் எடுத்தவுடன் தன்னைச் செலிபிரிட்டியாக நினைத்து பதில் பேச மறுக்கிறார்கள். உன்னை மதிப்பதை நீயே கிண்டல் செய்து கொண்டால் நீயே தாழ்ந்தவன்’ என்று கூறியுள்ளார்.
நம்மிடம் கேள்வி கேட்பவர்களை சக மனிதனாக மதித்து மறுபதில் கொடுத்தால் அதை வைத்து விளையாடும் கிறுக்கு புத்தி கொண்டவர்களால் தான் பலர் ஒரு குறும்படம் எடுத்தவுடன் தன்னை celebrityஆக நினைத்து பதில் பேச மறுக்கிறார்கள்.. உன்னை மதிப்பதை நீயே கிண்டல் செய்து கொண்டால் நீயே தாழ்ந்த பிறவி..
— Mohan G Kshatriyan 🔥 (@mohandreamer) June 22, 2020