பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சி நேற்று தொடங்கப்பட்ட நிலையில் வரும் அக்டோபர் இரண்டாம் வாரத்தில் பிக்பாஸ் தமிழ் 4வது சீசன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான இரண்டு புரமோ வீடியோக்களும் வைரலானதை அடுத்து இந்த சீசனும் கடந்த மூன்று சீசன்கள் போல் வெற்றி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன் தினம் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் வெளியிட்ட கொரோனா வைரஸ் விழிப்புணர்வுடன் கூடிய பிக்பாஸ் 4 புரமோ வீடியோ அனைவரையும் கவர்ந்த நிலையில் இந்த வீடியோவின் ஆரம்பத்திலேயே கமல் டான்ஸ் ஆடியபடியே வருவது அட்டகாசமாக இருந்தது.
இந்த நிலையில் இந்த வீடியோவில் கமலுக்கு டான்ஸ் இயக்குனராக இருந்தவர் கடந்த சீசனில் போட்டியாளராக இருந்தவரும், முன்னணி டான்ஸ் மாஸ்டருமான சாண்டி என தெரிய வந்துள்ளது. கமல்ஹாசனுக்கு டான்ஸ் கற்று கொடுத்த புகைப்படத்தை சாண்டி தனது இன்ஸ்டாமிராமில் பதிவு செய்துள்ளார்.
கமல் அவர்களுடன் மீண்டும் இணைந்து பணிபுரிந்ததில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும், அவருடைய திறமையும் சினிமா அறிவும் அளவிட முடியாதது என்றும் சாண்டி குறிப்பிட்டுள்ளார். எனவே மூன்றாவது சீசனில் போட்டியாளராகவும் இந்த நான்காவது சீசனில் டான்ஸ் மாஸ்டராகவும் சாண்டியின் பங்களிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.