கொரோனா வைரஸ் (கொவிட்-19) தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய இரு அமெரிக்கர்களுக்கு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மினசோட்டாவின் எக்செல்சியரில் வசிப்பிடத்தை கொண்ட இருவருக்கும் தலா 1,000 அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஒன்றாரியோ மாகாண பொலிஸ் அதிகாரிகள், ஜூன் 24ஆம் திகதி, 66 வயதான ஆணும், 65 வயதான பெண்ணும் கனடாவுக்குள் நுழைந்தனர் என்று கூறியுள்ளனர்.
அவர்கள் தங்கள் கனேடிய இடத்திற்கு நேராக அழைத்து செல்லப்பட்டதாகவும், 14 நாட்கள் அங்கேயே தனிமைப்படுத்தப்பட்டு இருக்கவும் கூறப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இரு நபர்களும் தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தைப் பின்பற்றத் தவறிவிட்டனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.