அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ரிவர்சைட் கவுண்டி என்ற வனப்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது. ஒரு சில மணி நேரங்களில் மளமளவென பரவிய தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
முதலில் சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் தீ பரவியதாக கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்புத்துறை அதிகாரிகள், 1,300 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களை கொண்டு காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர். ஆனாலும், தொடர்ந்து தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளிக்கத் தொடங்கியது.
இந்த காட்டுத்தீக்கு ஆப்பிள் பயர் என பெயரிட்ட அதிகாரிகள், வனப்பகுதியை யொட்டி 2500க்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களை, அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்நிலையில், ஏராளமான தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்தியும் கட்டுக்கடங்காத காட்டுத்தீ, 20 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு பரவி உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செங்குத்தான, கரடுமுரடான மலைப்பகுதிகளில் தீயணைப்பு வாகனங்கள், ஹெலிகாப்டர்கள் அணுக முடியாதவையாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத்தீ- 20 ஆயிரம் ஏக்கர் எரிந்து நாசம்
- Master Admin
- 03 August 2020
- (442)

தொடர்புடைய செய்திகள்
- 13 May 2024
- (278)
புரோட்டீன் பவுடர் எடுத்துக்கொள்கிறீங்களா...
- 18 November 2020
- (750)
உலகில் கொரோனா வைரஸூடன் கண்டறியப்பட்ட முத...
- 01 November 2024
- (94)
ஒற்றைத் தலைவலி இருப்பவர்கள் இந்த உணவுகளை...
யாழ் ஓசை செய்திகள்
உச்சம் தொட்ட தங்க விலை : வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்
- 17 April 2025
யாழ் விடுதியொன்றில் இரு இளைஞர்களின் மோசமான செயல்
- 17 April 2025
100 வீத வருகையை பதிவு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- 17 April 2025
இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
- 17 April 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
வேப்ப இலையில் ஃபேஸ் பேக்... ஆச்சரியமூட்டும் நன்மைகள்
- 12 April 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.