பொதுவாக பெண்கள் அதிகமாக சந்திக்கக்கூடிய பிரச்சினைகளில் கண் கருவளையமும் ஒன்று. இது முக அழகைக் கெடுப்பது மட்டுமல்ல கண்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

இந்த பிரச்சனை பலவகையான காரணங்களினால் ஏற்படுகிறது இதனால் பெண்களின் தோற்றம் வயதான தோற்றத்தை ஏற்படுத்தும்.

பொதுவாக கண்களின் கருவளையம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமே தூக்கமின்மை பிரச்சினை தான். நம் உடலுக்கு தேவையான அளவு தூக்கம் இல்லாமல் போனால் கண்களை சுற்றி இருக்கும் ரத்த நாளங்கள் விரித்து இரத்தம் ஓட்டம் அதிகரிக்கும். இதனால் மெல்லியதாக இருக்கும் சருமத்தில் அதிகமான இரத்த ஓட்டம் வெளிப்படையாக தெரியும்.

உடலில் மெலனின் என்ற ஹார்மோன் உற்பத்தி செய்வதால் இயற்கையாகவே கண்களில் கருவளையம் ஏற்படும். இது உடலை uv கதிர்களிடம் இருந்து நமது உடலைப் பாதுகாப்பதோடு கருவளையத்தையும் உண்டாக்கும்.

ஒரு சிலருக்கு சருமம் மெல்லியதாக இருப்பதால் கண்களுக்கு கீழே குறைவான கொழுப்பு திசுக்கள் இருக்கும். இது அப்பகுதிகளில் இருக்கும் ரத்த நாளங்களை விரிவாக்கி கருவளையத்தை ஏற்படுத்தும்.

சிவப்பு ரத்த அணுக்கள் குறைவாக இருக்கும் பொழுது கண்களுக்கும் ரத்தஓட்டம் குறைவாக இருக்கும் எனவே இயற்கையாக முகம் பொலிவிழந்து, கண்கள் சோர்வாக இருக்கும்.

கருவலையம் எதனால் வருகிறதுஇதை தவிர இன்னும் சில காரணங்களாலும் கருவளையம் ஏற்படும் அவையானவன.    

அதிகம் வெயிலில் சுற்றி திரிபவர்கள்

மனஉளைச்சலில் பாதிக்கப்பட்டவர்கள்

புகை மற்றும் மது அருந்துபவர்களுக்கு

போதியளவு நீர் அருந்தாமை

ஊட்டச்சத்துக் குறைப்பாடு

உணவுப் பழக்கவழக்கங்கள்

முகங்களுக்கு ஒவ்வாத அழகுசாதனப்பொருட்கள் 

போன்ற காரணங்களாலும் கருவளையம் ஏற்பட்டு அழகைக் கெடுக்கிறது.