முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இப்படம் தோல்வியடைந்தபின், தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டாத பூஜா, தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் நடிக்க துவங்கினார். மீண்டும் விஜய்யின் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். இப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

பூஜா ஹெக்டேவின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த 7 திரைப்படங்களும் தோல்வியை தழுவியது. மேலும் தற்போது பாலிவுட்டில் உருவாகவுள்ள தேவா எனும் திரைப்படத்தில் கமிட்டாகியுள்ளார் என தகவல்கள் வெளியாகின்றன.

இந்த நிலையில், நடிகை பூஜா ஹெக்டே பிரபல பாலிவுட் நடிகர் ரோகன் மெஹ்ரா என்பவருடன் காருக்குள் இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. பூஜா ஹெக்டே நடிகர் ரோகன் மெஹ்ராவை காதலித்து வருவதாகவும் தகவல் பரவி வருகிறது.