பிஸ்கெட்டில் சர்க்கரை, கொழுப்பு, டிரான்ஸ்ஃபேட் அமிலங்கள் அதிகமாக இருக்கின்றது. ஏனெனில் பிஸ்கட் தயாரிக்கும் போது அதிக வெப்பநிலையில், எண்ணெய், டால்டா போன்றவற்றினை சூடுபடுத்தும் போது டிராஸ்ஃபேட் அமிலங்கள் உருவாகின்றது.
இவற்றின் அளவுகளை பிஸ்கட் பாக்கெட்டில் குறிப்பிடப்படுவதில்லை. இவை உடலில் அதிகமாக சேரும் போது கொழுப்பின் அளவு அதிகமாவதுடன், இதயநோய் அபாயம் ஏற்படுகின்றது.
குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுத்து நீங்கள் தவறு செய்ய வேண்டாம். அதன் சுவையால் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டுவிட்டு சாப்பாடு வேண்டாம் என்று கூறுவார்கள்.
இவ்வாறு இனிப்பினை மட்டும் எடுத்துக்கொண்டு பழகிய குழந்தைகள், பின்பு காரம், கசப்பு, புளிப்பு, உவர்ப்பு போன்ற சுவைகளை எடுத்துக்கொள்ள தயங்குகின்றனர்.
இதமட்டுமின்றி பருப்பு வகைகள், மற்றும் காய்கறி, பழங்கள் இவற்றினையும் சாப்பிட அவர்கள் விரும்புவதில்லை. பிஸ்கட் சாப்பிட்டுவிட்டு வாயைக் கொப்புளிக்காமல் இருப்பதால் பல் சொத்தையும் ஏற்படுகின்றது.
குழந்தைகளின் செரிமான பிரச்சினை ஏற்படுத்தும் பிஸ்கட், அதிகமான நீர்ச்சத்தினை உறிஞ்சும் தன்மை உள்ளதால் மலச்சிக்கல் ஏற்படுகின்றது.
வாரத்திற்கு இரண்டுமுறை இவற்றினை சாப்பிடுவதில் தவறு இல்லை. ஆனால் இதனை அதிகமாக சாப்பிட்டு அதுவே உணவாக மாறிவிடக்கூடாது.
பிஸ்கட்டிற்கு பதிலாக பழங்கள், சுண்டல், ஓட்ஸ் போன்ற உணவுகளை சாப்பிடுவதற்கு பிள்ளைகளுக்கு பழக்க வேண்டும்.