பொதுவாகவே வீடுகளில் நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பாத்திரங்களில் சமைப்போம் அப்படி சமைக்கும் பாத்திரங்களில் இது போன்ற பாத்திரங்களில் சமைத்தால் ஆபத்து என்று சொல்லப்படுகிறது.

முன்பெல்லாம் சமையல் செய்வது மண்சட்டிகளில் தான் சமைத்து ஆரோக்கியம் பெறுவார்கள். ஆனால் இப்போதுள்ளவர்கள் புது புது பாத்திரங்களில் சமைத்து சாப்பிட்டு உடல் நலத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி நீங்கள் சமைத்து சாப்பிடக் கூடாத பாத்திரங்கள் எது தெரியுமா? விரிவாக தெரிந்துக் கொள்ளுங்கள்.

இந்தப் பாத்திரங்களில் ஒருபோதும் சமைத்திடாதீர்கள்1. செப்பு பாத்திரங்களில் தண்ணீர் குடிக்கலாம் ஆனால் அதில் சமைக்க கூடாது. ஏனெனில் உணவில் உப்பு சேர்த்து சமைக்கும் போது உப்பில் இருக்கும் அயோடின் கலந்து அதிக செப்புத் துகள்களில் வெளியாகிறது அதனால் இது உடலுக்கு ஆரோக்கியம் இல்லை.

2. பித்தளை ஒரு உலோகம் என்றாலும் அதில் சில உணவுகளை மட்டுமே சமைப்பார்கள் உதாரணமாக இறைச்சி உணவுகளை அதிகம் சமைப்பார்கள். ஆனால் சில உணவுளை சமைக்க மாட்டார்கள் ஏனெனில் பித்தளையை சூடாக்கும் போது உப்பு கலந்து உணவுடன் இணைந்து உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

3. அலுமினியத்தில் சமைக்கும் போது அதில் தக்காளி, வினிகர் போன்ற அமில உணவுகளுடன் இணைந்து வினையை ஏற்படுத்தும். மேலும், அலுமினியத்துடன் அமிலத்தண்மை கொண்ட காய்கறிகளை சமைத்து உண்ணும் போது உடலுக்கு சென்று நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும். மேலும், அலுமினிய பாத்திரத்தில் சமைக்கும் போது மரத்தில் செய்யப்பட்ட கரண்டிகளை பயன்படுத்துவது நல்லது.             

சமையலுக்கு ஏற்ற பாத்திரங்கள்

1. எவ்வித தீங்கையும் விளைவிக்காத உலோகம் என்றால் அது இரும்பு தான். அப்படி இரும்பு பாத்திரங்களில் சமைப்பதால் உடலில் சிறந்த செயல்பாட்டிற்கு அவசியமாகிறது.

2. துருப்பிடிக்காத எஃகு மற்றும் களிமண் பானைகள் உணவு சமைப்பதற்கு ஏற்றது.

3. மண்பானையில் சமைத்து சாப்பிடுவதால் பல ஊட்டச்சத்துக்களை பாதுகாக்கிறது.