தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ் திரையுலகை சேர்ந்த சிலரும் தேர்தலில் போட்டியிட உள்ளனர்.
அந்த வகையில் பிரபல நடிகர் மயில்சாமியும் தேர்தலில் போட்டியிட உள்ளார். எம்ஜிஆரின் தீவிர ரசிகரான மயில்சாமி, ஜெயலலிதா மரணம் அடையும் வரை அதிமுகவில் இருந்தார். அதன்பின் அக்கட்சியில் இருந்து வெளியேறிய அவர், தற்போது சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட உள்ளார். அவர் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டிருந்தது. அந்த வகையில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் நடிகர் மயில்சாமிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
விசில் சின்னம் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்துள்ள மயில்சாமி, இதுகுறித்து கூறியதாவது: “எம்ஜிஆர் படத்தை பார்த்து பலமுறை நான் விசில் அடித்திருக்கிறேன். அப்படிப்பட்ட எனக்கு விசில் சின்னமே கிடைத்துள்ளது பெருமையாக இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.
சென்னை விருகம்பாக்கம் சுயேச்சை வேட்பாளர் நடிகர் மயில்சாமிக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு. pic.twitter.com/sI6fbtiQuY
— meenakshisundaram (@meenakshinews) March 23, 2021