உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்ற பழமொழியில், நாம் சாப்பிடும் உணவில் சேர்க்கப்படும் உப்பிற்கு எவ்வளவு அவசியம் உள்ளது என்பதை சொல்கிறது.

செல்வங்களுக்கு அதிபதியான லட்சுமி பாற்கடலில் தோன்றியவள். லட்சுமி தோன்றிய அந்தக் கடலில் தான் உப்பும் கிடைக்கின்றது.

உப்பில் லட்சுமி வாசம் செய்கின்றாள் என்றும் அதனை வெள்ளிக்கிழமையில் வாங்குவது மிகவும் நல்லது என்று கூறப்படுகின்றது.

இதன் அடிப்படையில் தான் கடலில் கிடைக்கும் உப்பை லட்சுமியின் அம்சமாக போற்றப்படுகின்றது.

எனவே தான் கிரகப்பிரவேசத்தில் புதிய வீட்டிற்கு முதலில் உப்பு எடுத்துச் செல்லும் பொருட்களாக உப்பு முதன்மை பெறுகின்றது.

வெள்ளிக்கிழமையில் கண்டிப்பா உப்பு வாங்குங்க... அதிர்ஷ்டம் நிச்சயம் வீட்டுக் கதவைத் தட்டும் | Friday Salt Purses Money Knock Your Doorலட்சுமிக்கு உகந்த வெள்ளிக்கிழமை அன்று அவளுக்கு அம்சமாக விளங்கும் உப்பை நாம் வாங்கினால், நமக்கு இரட்டிப்பு பலன் கிடைப்பதோடு, நமது வீட்டிலும் லட்சுமி கடாட்சம் எப்போதும் நிறைந்து இருக்கும் என்று கூறுகின்றார்கள். ஆகையால் கல் உப்பாக வாங்கி வைப்பது நல்லது.

வீட்டில் பண வரவு அதிகரிக்க, வெள்ளிக்கிழமைகளில் காலை 6 முதல் 6.15க்குள்ளும், மதியம் 1 முதல் 1.15க்குள்ளும், இரவு 8 முதல் 8.15க்குள்ளும் கடையில் உப்பு வாங்கி வரவேண்டும்.

இப்படிவாரா வாரம் சிறிதளவு உப்பு வாங்கி வர, செல்வச் செழிப்பு அதிகரிக்கும். கல் உப்பு தான் மகாலட்சுமியின் அம்சமாகும்.