சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஷிவானி நாராயணன். பின் சமூக வலைத்தளத்தில் தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.
தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த ஷிவாங்கி நீண்ட நாட்கள் வீட்டிற்குலேயே இருந்தார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் சமயத்தில் பாலாஜி முருகதாஸ் மற்றும் ஷிவானி இருவரும் காதலிப்பதாக சர்ச்சை எழுந்தது. ஆனால், எங்களுக்குள் அப்படி எதுவுமே இல்லை என இருவரும் கூறிவிட்டனர்.
இந்நிலையில், சமீபத்தில் தன்னுடைய 22வது பிறந்தநாளை பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளார் ஷிவானி.
அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூட பதிவு செய்துள்ளார். தான் தனியாக இருக்கும் புகைப்படங்கள் மட்டுமே அவர் பதிவு செய்தார்.
ஆனால், பாலாஜிமுருகதாஸ் தானும் அந்த பார்ட்டியில் ஷிவானிடன் இருந்தேன் என்பது போல் பார்ட்டியில் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள், இருவரும் மீண்டும் காதலிக்க துவங்கிவிட்டார்களா என்பது போல் பேச துவங்கிவிட்டனர்.