ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க சாதக பாதக பலன்களை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.

கிரக பெயர்ச்சிகளில் குறிப்பாக சனி பெயர்ச்சிக்கு இந்து மதத்தில் பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.

சனிபகவானின் நட்சத்திர மாற்றம்: இந்த ராசிகளை 146 நாட்களுக்கு வாட்டபோகும் துன்பம்! | Saturn Transit Revathi Nakshatra Who Get Bad Luck

அதனால் சனி பெயர்ச்சி என்றால் அனைவரின் மனதிலும் ஒரு இனம் புரியாத பயம் ஏற்படுவது வழக்கம். தற்போது சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் இருக்கிறார்.

ஆனால் மே 17, 2026 முதல், சனிபகவான் ரேவதி நட்சத்திரத்தில் நுழைந்து அக்டோபர் 9, 2026 வரை 146 நாட்கள் அங்கேயே இருப்பார். இதன் விளைவாக குறிப்பிட்ட சில ராசிகளின் வாழ்வில் அதிகளவில் பாதக பலன்கள் ஏற்படபோகின்றது.

சனிபகவானின் நட்சத்திர மாற்றம்: இந்த ராசிகளை 146 நாட்களுக்கு வாட்டபோகும் துன்பம்! | Saturn Transit Revathi Nakshatra Who Get Bad Luck

அப்படி சனி நட்சத்திர பெயர்ச்சியால் நரகத்துக்கு இணையான துன்பத்தை அனுபவிக்போகும் ராசியினர் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

சனிபகவானின் நட்சத்திர மாற்றம்: இந்த ராசிகளை 146 நாட்களுக்கு வாட்டபோகும் துன்பம்! | Saturn Transit Revathi Nakshatra Who Get Bad Luck

சனியின் இந்த நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசியினர்  மிகுந்த மன அழுத்தத்தை அனுபவிக்கப்போகின்றார்கள்.  

இவர்கள் இந்த காலகட்டத்தில் எடுக்கும் முயற்ச்சிகள் அனைத்தும் தோல்வியில் முடியும் வாய்ப்பு அதிகம் என்பதால் புதிய விடயங்களை ஆரம்பிப்பது குறித்து மிகுந்த அவதானம் தேவை. 

சாலையில் போகும் போது சிக்கலில் சிக்கும் வாய்ப்பு இருப்பதால் முடிந்தவரை சாலை விதிகளை கடைப்படிக்க வேண்டும். குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும். வார்த்தைகளில் மிகவும் கவனம் தேவை.

கும்பம்

சனிபகவானின் நட்சத்திர மாற்றம்: இந்த ராசிகளை 146 நாட்களுக்கு வாட்டபோகும் துன்பம்! | Saturn Transit Revathi Nakshatra Who Get Bad Luck

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த நட்சத்திர பெயர்ச்சியால் ஆரோக்கியத்தில் பெரியளில் பாதிப்பு ஏற்படக்கூடும். இவர்கள் உணவு விடயத்தில் இந்த காலகட்டத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டியது அவசியம்.

பணியிடத்தில் இவர்களையே குறிவைப்பது போன்ற உணர்வு அதிகமாகும். சக ஊழிகர்களுடன் ஏற்படும் பிரச்சினையால் வேலையை விட்டு போகும் அளவுக்கு மன அழுத்தம் ஏற்படும்.

இந்த காலகட்டத்தில் எடுக்கும் பெரும்பாலான முடிவுகள் தோல்வியிலேயே முடியும் என்பதால், புதிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. பண விடயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

மீனம்

சனிபகவானின் நட்சத்திர மாற்றம்: இந்த ராசிகளை 146 நாட்களுக்கு வாட்டபோகும் துன்பம்! | Saturn Transit Revathi Nakshatra Who Get Bad Luck

மீன ராசியினருக்கு  இந்த சனி  நட்சத்திர பெயர்ச்சி வாழ்வில் எதிர்மறையான பல விளைவுகளை ஏற்படுத்தப்போகின்றது. தவறான புரிதலால் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ள அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.

குழந்தைகளால் அதிக கவலை அடையும் நிலை உருவாகும். மனநிலையில் மீள முடியாத அளவுக்கு விரக்தி நிலை உருவாகும் வாய்ப்பு காணப்படுகின்றது. தொழில் ரீதியில் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.

இந்த காலகட்டத்தில் நீதிமன்ற வழக்குகளில் தோல்வியடையும் வாய்ப்பு அதிகம். நண்பர்களும் எதிரியாக மாறும் அளவுக்கு விவாதங்கள் எழும். முடிந்தவரையில் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.