உச்சநீதிமன்ற அமர்வில் அனைத்து மாநிலங்களுக்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் அமைய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணாவுக்கு பல்வேறு விவகாரங்களை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது-
தமிழகத்தில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை பயன்படுத்துவது பொருத்தமானதாக இருக்கும். அதனால், உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும்.
உச்சநீதிமன்ற அமர்வில் அனைத்து மாநிலங்களுக்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் அமைய வேண்டும்.
நீதிபதிகளை நியமிப்பதில் சமூகப் பன்முகத்தன்மை, சமூக நீதியை பேணும் வகையில் மாற்றம் தேவை.
நீதித்துறையில் கூட்டாட்சித்தன்மை பிரதிபலிக்கப்பட உச்சநீதிமன்ற நிரந்தரக் கிளைகளை நிறுவ வேண்டும்.
சென்னை, கொல்கத்தா, மும்பை, டெல்லியில் உச்சநீதிமன்றத்தில் கிளைகளை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தது.