தன்னுடைய அம்மா இறந்து விட்டதால் அவரை ஞாபகப்படுத்தும் வகையில் மகன் தாஜ்மஹால் வடிவில் நினைவு ஆலயம் கட்டிய சம்பவம் உலக மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்தியா - திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பகுதியை சேர்ந்த தம்பதியினர் அப்துல் காதர்- ஜெய்லானி பீவி.

இவர்கள் சென்னையில் ஹார்டுவேர்ஸ் கடை வைத்து நடத்தி வந்துள்ளார்கள். அப்போது எதிர்பாராத விதமாக அவரின் தந்தை காதர் உயிரிழந்துள்ளார்.

தன்னுடைய பிள்ளைகளை சரியாக பராமரித்து கொள்வதற்காக கடையை எடுத்து நடத்தியுள்ளார் ஜெய்லானி பீவி.

இந்த நிலையில் அம்ருதீன் ஷேக் தாவுது பி.ஏ படிப்பை முடித்து விட்டு சென்னையில் தொழிலதிபராக இருந்து வருகிறார். அம்மாவின் கட்டுபாட்டில் வளர்ந்த காரணத்தினால் அம்ருதீன் அம்மாவின் அனுமதியில்லாமல் எந்த காரியத்தை செய்யமாட்டார்.

இப்படி சென்றுக் கொண்டிருக்கும் போது கடந்த 2020ம் ஆண்டு தனது 72 வயதில் “ஜெய்லானி பீவி” உடல் நிலை சரியில்லாமல் உயிரிழந்துள்ளார்.

அம்மா இறந்த துயரத்தை தாங்க முடியாமல் தாஜ்மஹால் கட்டிய மகன்! | Taj Mahal For His Passed Mother In Thiruvarur

 

தாயின் நினைவால் தவித்து வந்த அம்ருதீன் அவருக்கு தாஜ்மஹால் வடிவில் கட்டலாம் என திருச்சியிலுள்ள கட்டிட வடிவமைப்பாளரை வரவழைத்து தெரிவித்துள்ளார்.

இதன்படி, ராஜஸ்தானில் இருந்து பளிங்கு கற்கள், தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு தாஜ்மஹால் வடிவில் அழகிய நினைவாலையம் கட்டப்பட்டது. அதனுள் ஜெய்லானி பீவி அம்மையாரின் சமாதி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நினைவு இல்லம் கடந்த 2ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டுள்ளது. நினைவாலையம் மட்டுமல்ல தொழுகையும் அங்கு நடத்தலாம். மதரஸா பள்ளியும் இயங்கி வருகின்றது.

அம்மா இறந்த துயரத்தை தாங்க முடியாமல் தாஜ்மஹால் கட்டிய மகன்! | Taj Mahal For His Passed Mother In Thiruvarur

 

மேலும் அங்கு 10 மாணவர்கள் தங்கி படித்தும் வருகிறார்கள். இதனை தொடர்ந்து ஜெய்லானி பீவி அமாவாசைக்கு அடுத்த நாள் இறந்த காரணத்தினால் ஒவ்வொரு அமாவாசையும் 1000 நபர்களுக்கு அன்னதானமாக பிரியாணி வழங்கப்படுகின்றது.

இந்த செய்தி அங்கிருந்த மக்களை ஆச்சிரியப்பட வைத்ததுடன், அம்மாவிற்காக மகன்மார்கள் சாப்பாடு கூட தராமல் விரட்டி விடும் இந்த காலத்தில் இப்படியான சில செயல்கள் அவர்களுக்கு சிறந்த உதாரணமாக பார்க்கப்படுகின்றது.     

அம்மா இறந்த துயரத்தை தாங்க முடியாமல் தாஜ்மஹால் கட்டிய மகன்! | Taj Mahal For His Passed Mother In Thiruvarur