சீனாவின் கிழக்கு மற்றும் மத்திய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட சூறாவளி தாக்குதலால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர்.  சீனாவின் கிழக்கே ஜியாங்சு மாகாணத்தில் சுஜோ நகரில் ஷெங்ஜே பகுதியில் நேற்றிரவு 7 மணியளவில் சூறாவளி வீசியது.

இதன் பாதிப்பில் 4 பேர் உயிரிழந்தனர்.  149 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.  இதன்பின்னர் மத்திய சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் உகான் நகரில் 2 மாவட்டங்களின் வழியே மற்றொரு சூறாவளியானது கடந்து சென்றது.

இதனால் ஏற்பட்ட பாதிப்புக்கு 8 பேர் உயிரிழந்தனர்.  280 பேர் காயமடைந்தனர்.  சூறாவளியால் உகான் நகரில் 27 வீடுகள் இடிந்து விழுந்தன.  இதுதவிர 130 வீடுகள் சேதமடைந்தன.  கட்டிட பணி நடந்து வந்த இடத்தில் உள்ள கூடாரங்கள், 2 கிரேன்களும் சேதமடைந்தன.  மின் வினியோகமும் துண்டிக்கப்பட்டது.  இந்த சூறாவளியானது மணிக்கு 202 முதல் 220 கி.மீ. வரையிலான வேகத்தில் வீசியது.