முட்டையுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
புரதங்களின் சிறந்த ஆற்றல் மையமாக இருப்பது முட்டை தான். பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளைத் தடுப்பதில் முட்டை சிறந்ததாகும்.
முட்டையில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. ஆனால் முட்டையை சில உணவுகளுடன் சாப்பிடும் போது அது ஆபத்தாகிவிடும்.
செரிமான ஆரோக்கியத்தையும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மாற்றவும் செய்கின்றது. தற்போது கோழி முட்டையுடன் எந்தெந்த உணவுகளை சாப்பிடக்கூடாது என்று தெரிந்து கொள்வோம்.
சோயா பால் உடம்பிற்கு ஆரோக்கியம் என்றாலும் இதனை முட்டையும் சாப்பிடக்கூடாது. ஏனெனில் இரண்டிலும் புரதம் இருப்பதால், இவை செரிமான அமைப்பில் பிரச்சனையாகிவிடும்.
அதே போன்று முட்டையுடன் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவது நல்லது அல்ல. இவை இரண்டும் இணைந்தால் அமினோ அமிலங்கள் வெளியாவதுடன், முட்டையின் புரத கலவையையும் மாற்றுகின்றது. இவற்றினை சேர்த்து உண்பதால் வயிறு வலி மற்றும் செரிமான பிரச்சினை ஏற்படும்.
முட்டையுடன் தேநீரையும் ஒன்றாக சாப்பிடக்கூடாது. அடிக்கடி இவ்வாறு சாப்பிட்டால் முட்டை புரதத்தை உறிஞ்சும் உடலின் திறனை அழிக்கின்றதாம். இது உங்களை அமிலத்தன்மை, வயிற்று வலி மற்றும் பிற செரிமான பிரச்சனைகளுக்கு ஆளாக்குகிறது.
முட்டையுடன் இறைச்சி சாப்பிடும் பழக்கம் வைத்திருப்பவர்கள் நிச்சயம் தவிர்க்க வேண்டும். முட்டையில் பிரியாணியில் சேர்த்து சாப்பிடுபவர்கள் அதிகம் உள்ளனர். அவ்வாறு செய்வதால் அதிகப்படியான புரதம் உடம்பிற்கு சென்று அதிகமாக உடல் சேர்வடைந்துவிடுமாம்.
வாழைப்பழத்துடன் முட்டையை சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியத்தில் மாற்றம் ஏற்பட்டு உடல் பிரச்சனை ஏற்படும். வாழைப்பழம் மற்றும் முட்டை போன்ற புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது உங்கள் செரிமானத்தை கடினமாக்கும் என்பதால் கவனமாக இருக்கவும்.