இன்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் மே மாதம் 30 ஆம் திகதி வரையில் இவ்வாறு போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்தியவசிய சேவைகளுக்கு இந்த போக்குவரத்து கட்டுப்பாடு அமுலில் இருக்காது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.