தற்போது வளர்ந்து வரும் நாகரீக மாற்றத்தில் குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

அதிலும் குறிப்பாக தொழில்நுட்பத்துறையில் வேலை செய்பவர்கள் மற்றவர்களை ஏமாற்றுவதில் கில்லாடிகளாக இருப்பார்களாம். உலகெங்கிலும் உள்ள மக்கள் பல புதுமையான வழிகளில் பணம் சம்பாதித்து வருகிறார்கள். அதனை ஏமாற்றும் விதமும் நாளுக்கு நாள் மாறிக் கொண்டு வருகின்றது.

“மேட்லைன் ஸ்மித்” என்பவர் ஏமாற்றும் ஆண்களை கையும் களவுமாக பிடிப்பதையே தனது தனித்துவமான தொழிலாக சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தியுள்ளார். இவரிடம் கணவர் மற்றும் காதலரை சந்தேகப்படும் பெண்கள் வாடிக்கையாளராக இருந்தார்கள்.

மேட்லைன் ஸ்மித் அவருக்கு கிடைக்கும் தகவல்களை வைத்து துரோகம் செய்யும் ஆண்களை அம்பலப்படுத்தவும், அவர்களின் துணையின் சந்தேகங்களை உறுதிப்படுத்தவும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வந்தார்.

இந்த துறையில் வேலை செய்யும் ஆண்கள் மனைவிக்கு துரோகம் செய்வார்களாம்.. எந்த துறை தெரியுமா? | Do Guys Fall In Love Harder Than Girlsஅந்த வகையில், ஏமாற்றும் ஆண்கள் எந்த துறையில் அதிகமாக வேலை செய்கிறார்கள் என்பதனை தொடர்ந்து எமது பதிவில் காணலாம்.

1. காவல் துறையில் பணிபுரியும் ஆண்கள் தான் மிகவும் விசுவாசமற்றவர்களாக இருப்பார்களாம். மேட்லைன் ஸ்மித், நடத்திய ஆய்வில் கையும் களவுமாக மாட்டிய ஆண்களில் அதிகமானோர் காவல் துறையில் பணி செய்து வந்தார்கள்.

2. தனிப்பட்ட உடற்பயிற்சி பயிற்சியாளர்களும் இந்த வரிசையில் அடுத்து வருகிறார்கள் என அவர் கூறுகிறார்.

இந்த துறையில் வேலை செய்யும் ஆண்கள் மனைவிக்கு துரோகம் செய்வார்களாம்.. எந்த துறை தெரியுமா? | Do Guys Fall In Love Harder Than Girls3. நீதி வழங்கி தரும் இடத்தில் இருக்கும் வழக்கறிஞர்களும் துணையை ஏமாற்றுவதில் கில்லாடிகளாக இருந்துள்ளார்கள்.

4. மருத்துவர்கள் என கூறும் பொழுது யாரும் பெரிதாக நம்பமாட்டார்கள். மேட்லைன் ஸ்மித்திடம் சிக்கிய ஆண்களில் மருத்துவர்களும் இருந்துள்ளார்கள் என்பது வியக்கதக்க விடயம்.

5. மேட்லைனின் கூற்றுப்படி, தங்கள் உடல் வலிமையைக் காட்டும் படங்களைப் பகிரும் ஆண்கள் ஏமாற்றும் குணம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.

இந்த துறையில் வேலை செய்யும் ஆண்கள் மனைவிக்கு துரோகம் செய்வார்களாம்.. எந்த துறை தெரியுமா? | Do Guys Fall In Love Harder Than Girls6. சிலர் சமூக வலைத்தளங்களில் தனியாக இருக்கும் படங்களை தான் அதிகமாக பகிர்வார்கள். அவர்களின் குடும்பத்தினர் மற்றும் துணை இருப்பதை பெரிதாக வெளியில் காட்ட விரும்பமாட்டார்கள். இப்படியானவர்களே சமூகத்தில் பலரை ஏமாற்றும் முக்கிய நபராக இருப்பார்கள்.

முக்கிய குறிப்பு

இந்த செய்தி இணையத்தில் இருந்து பெறப்பட்டவை மாத்திரமே..