தற்போது உலர் திராட்சை நிறைய பேரின் விருப்பமான ஸ்நாக்ஸாக பார்க்கப்படுகின்றது.
இந்த உலர் திராட்சையில் இரும்புச்சத்து, பொட்டாசியம், காப்பர், வைட்டமின் பி6, மாங்கனீசு போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன.
இவ்வளவு சத்துக்கள் கொண்ட உலர் திராட்சையை பாயாசம், கேசரி, சர்க்கரை பொங்கல் போன்ற உணவுகள் தயாரிக்கும் பொழுது சேர்ப்பார்கள். ஆனால் உலர் திராட்சையை இப்படி சாப்பிடுவதிலும் பார்க்க தனியாக ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் பலன் இரட்டிப்பாக கிடைக்கும்.
பெண்களை விட ஆண்கள் நீரில் ஊற வைத்த உலர் திராட்சையை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
அதிலும் குறிப்பாக திருமணமான ஆண்கள் ஊற வைத்த உலர் திராட்சை சாப்பிடுவது நல்லது. இதன் மூலம் அவர்களின் பாலியல் பிரச்சினைகள் தீர்வுக்கு வரும்.
அப்படியாயின், தினமும் ஊற வைத்த உலர் திராட்சை சாப்பிட்டு வந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. உலர் திராட்சையில், டெஸ்டோஸ்டிரோன் எனப்படும் ஹார்மோன் அதிகரிக்கும். இதனால் திருமணமான ஆண்கள் நீரில் ஊற வைத்த உலர் திராட்சை அதிகமாக சாப்பிடுவார்கள். இது அவர்களின் கணவன்-மனைவி உறவை மேமம்படுத்தும்.
2. ஆண்கள் நீரில் ஊற வைத்த உலர் திராட்சையை தினமும் சாப்பிடும் பொழுது அதிலிருக்கும் அர்ஜினைன் என்னும் புரோட்டீன் உடலுக்கு நன்மை தருகிறது. அத்துடன் அவர்களின் விந்தணுக்களையும் ஆரோக்கியமாக வைத்து கொள்கிறது.
3. இளம் வயது ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத்தன்மை பிரச்சினைக்கு உலர் திராட்சை தீர்வளிக்கிறது. தொடர்ந்து உட்க் கொள்ளுமு் ஒருவரின் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
4. சிலருக்கு மலச்சிக்கல் பிரச்சினை இருக்கும். இதனால் அவர்களால் மலத்தை இலகுவாக வெளியேற்ற முடியாத நிலை இருக்கும். அப்படியானவர்கள் நீரில் ஊற வைத்து சாப்பிடலாம். இது பெண்களுக்கும் நிவாரணம் தரும்.
5. இரத்த சோகை நோயுள்ளவர்கள் உலர் திராட்சையை நீரில் ஊற வைத்து சாப்பிடலாம்.