ஜோதிடத்தில் கிரகப்பெயர்ச்சி எவ்வளவு முக்கியத்துவம் பெறுகின்றதோ அதே அளவிற்கு நட்சத்திர பெயர்ச்சி முக்கியத்துவம் பெறுகின்றது. இந்த நட்சத்திர பெயர்ச்சி மூலம் மனித வாழ்க்கை மாறும் என கணிக்கப்படுகின்றது.

வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இவர் செல்வம், அழகு, காதல், ஈர்ப்பு, செழிப்பு ஆகியவற்றின் காரணியாகவும் கருதப்படுகிறார்.

இந்த நிலையில் இவர் ஏப்ரல் 01 ஆம் தேதி பூரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். இந்த நட்சத்திரபெயர்ச்சி எந்தெந்த ராசிகளுக்கு நன்மையை ஏற்படுத்தும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்னும் 90 நாட்களில் அதிர்ஷ்டம் யாருக்கு? | Venus Transit In Nakshatra Peyarchi Zodiac Signs

மீனம்
  • சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியானது மீன ராசிக்காரர்களுக்கு பலவிதமான நன்மைகளை வழங்கப் போகிறது.
  • வாழ்க்கை வாழ்வதற்கான ஆளுமை அதிகரித்து தம்பதிகளுக்கு இடையில் நெருக்கம் உண்டாகும்.
  • இதுவரை திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
  • வியாபாரிகள் முன்னேற்றப்பாதைக்கு செல்வார்கள்.
  • தொழிலாளர்கள் நிதி நிலையில் முன்னேறுவார்கள்.
ரிஷபம்
  • சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்கள் வருமானத்தில் நல்ல உயர்வைக் காண்பார்கள்.
  • பல வழிகளில் இருந்து புதிய பண வரவுகள் தேடி வரும்.
  • ஆனால் உங்களுடன் வேலை செய்பவர்களிடம் இருந்து எப்போதும் எச்சரிக்கையாக இருந்தால் வெற்றி.
  • தற்போது ஒரு வேலையில் இருப்பவர்களுக்கு புதிய நல்ல வேலை கிடைக்கும்.
  • தற்போது பணி புரியும் இடத்தில் சம்பள உயர்வில் மாற்றம் தெரியும்.
மகரம்
  • மகர ராசியின் 3 ஆவது வீட்டில் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி நிகழவுள்ளது.
  • உங்களுக்கு ஏதாவது திடீர் நிதி ஆதாயம் வந்து கொண்டே இருக்கும்.
  • சொந்த ஊர்விட்டு வெளிநாடுகளுக்கு நீங்கள் வேலைக்காக செல்வீர்கள். 
  • பழைய தொழிலுக்கு செய்த முதலீடு தற்போது லாபத்தை கொடுக்கும்.
  • மாணவர்கள் படிப்பு தேர்வில் முன்னிலையில் இருப்பார்கள்.