முதல் 28 வாரங்களுக்கு பின்னர் கர்ப்பிணி பெண்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகின்றமை ஒரு தீவிரமான நிலை என காசல் வைத்தியசாலையின் சிரேஷ்ட, விஷேட வைத்தியர் சனத் லெனரோல் தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணி பெண்கள் தொற்றுப்பு உள்ளாகின்றமை தொடர்பில் இன்று (06) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முதல் 28 வாரத்தில் தொற்றுக்கு உள்ளானவர்களுள் 80 % சதவீதமானவர்களுக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணி பெண்களுக்கு சந்தேகத்திற்கு இடமான நோய் அறிகுறிகள் இருப்பின் உடனடியாக வைத்திய ஆலோசனையை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.