ஒருவர் மருந்து அருந்துவிட்டு தற்கொலைக்கு முயற்சித்தால், அவரைக் காப்பாற்ற உடனே என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தவறுதலாகவே அல்லது தற்கொலைக்கு முயற்சிக்கவோ ஒருவர் விஷம் அருந்திவிட்டால் அவரை உடனடியாக சுத்தமான காற்றுள்ள இடத்திற்கு மாற்ற வேண்டும்.
குறித்த இடத்தில் காற்றை அடைக்காதவாறு கூட்டம் கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
விஷம் குடித்தவர் உயிரோடு தான் இருக்கின்றார் என்பதை உறுதி செய்துவிட்டு உடனே அவருக்கு முதலுதவி அளிக்கவும்.
விஷம் அருந்தியவரின் வயது, அவர் அருந்திய விஷத்தினைக் குறித்து தெரிந்து கொண்டால் சிகிச்சை அளிப்பதற்கு உதவியாக இருக்கும்.
வாய் அருகே சென்று முகர்ந்து பார்த்தால் தெரியும் வாசனையை வைத்து கண்டுபிடித்துவிடலாம். அவ்வாறு செய்தால் விஷயத்தை எளிதாக முறிக்கக்கூடிய மருந்துகளை கொடுப்பதற்கு தாமதம் ஏற்படாது.