தளபதி விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக இயற்கை பேரிடரின் போது பொதுமக்களுக்கு உதவி செய்யும் முதல் நபராக விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் தான் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் சமீபத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவு வெளியான நிலையில் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று உயர் கல்வி படிப்பதற்கு வசதி இல்லாத மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் இதுகுறித்து மாணவர்களின் விவரங்களை மாவட்டம் தோறும் அனுப்ப விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உத்தரவு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று பொருளாதார நிலை காரணமாக உயர்கல்வி படிக்க முடியாமல் இருக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் இந்த முடிவுக்கு அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் 10 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு நேரில் பரிசளிக்க உள்ளார் நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களை சென்னைக்கு அழைத்து பரிசளிக்க உள்ளார் என்று விஜய் மக்கள் இயக்க வட்டாரங்கள் கூறுகின்றன.