நடிகை வனிதா மற்றும் பீட்டர்பால் திருமணம் சமீபத்தில் நடந்து பெரும் சர்ச்சையான நிலையில், சர்ச்சை குறித்து கவலைப்படாமல், அவ்வபோது பதிலடி கொடுத்து வரும் வனிதா, தனது புதிய வாழ்க்கையையும் சந்தோஷமாக அனுபவித்து வருகிறார். குறிப்பாக தனது மகள்களுக்கு ஒரு நல்ல அப்பா கிடைத்துவிட்டார் என்பது வனிதாவுக்கு இரட்டிப்பு சந்தோஷம் ஆகும். இந்த நிலையில் பீட்டர்பால் மற்றும் தனது மகள்கள் குறித்து வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களுடன் கூடிய பதிவுகளை பதிவு செய்துள்ளார்.
தனது மகள் பீட்டர்பாலின் தோளில் சாய்ந்திருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள வனிதா, ‘உண்மையான தந்தை என்பது வேறு, அப்பா என்பது வேறு, ஒரு அப்பா ஒரு அம்மாவுக்கு சமம், ஒரு அம்மா அனைத்துக்கும் சமம் என்று பதிவு செய்துள்ளார்.
அதேபோல் இன்னொரு பதிவில் ‘உண்மையான அப்பா இல்லாத எல்லோருக்கும்’ என்று தனது மகள் பீட்டர்பால் தோளில் பாசத்துடன் கைபோட்டு இருக்கும் ஒரு புகைப்படத்தையும் வனிதா பகிர்ந்துள்ளார். இந்த இரண்டு புகைப்படங்களும் வனிதாவின் மகள்கள், பீட்டர்பாலை தங்கள் தந்தையாக ஏற்று கொண்டதை உறுதி செய்ததாகவே தெரிகிறது
வனிதாவின் திருமணத்தில் பல்வேறு சர்ச்சைகள் இருந்தாலும் வனிதாவின் மகள்களுக்கு ஒரு நல்ல அப்பா கிடைத்துவிட்டார் என்றே வனிதாவின் இந்த பதிவுகளில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.