பெருந்தோட்டதுறையில் இறப்பரில் ஆன கூடைகள் பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து மூங்கில் உற்பத்தியிலான கூடைகள் பயன்பாடு குறைவடைந்துள்ளது.

இந்நிலையில் கூடை உற்பத்தியாளர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.

தேயிலை கொழுந்து பறித்து கூடைகளிலேயே சேகரித்து வந்தனர்.

தற்பொழுது இறப்பரில் தயாரிக்கப்பட்ட கூடைகளை பயன்படுத்துகின்றனர்.

ஆகையினால் மூங்கிலில் கூடை தயாரிப்பவர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

நிறுவனங்களில் குப்பைகளை சேகரிப்பதற்கேனும் மூங்கில் உற்பத்திகளிலான கூடைகளை பயன்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.