தமிழ் ரசிகர்கள் மனதிலிருந்து நீங்க இடத்தை பிடித்துள்ள முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

தென்னிந்திய அளவில் முன்னணி நட்சத்திரமாக வளம் வரும் இவர், தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என தொடர்ந்து பல மொழிகளில் படங்கள் நடித்து வருகிறார்.

சமீபத்தில் கூட தெலுங்கில் இவர் கதாநாயகியாக நடித்த ரங் டே எனும் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

நடிகை கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்றசுவாரஸ்யமான விஷயங்களை பகிருவார்.

அந்த வகையில் தற்போது ரங் டே படப்பிடிப்பில், கீர்த்தி சுரேஷுக்காக காத்திருந்த கப்பல் புறப்பட்டவுடன் தலைதெறிக்க அலறியடித்து ஓடியுள்ளார்.

அதனை கீர்த்தி சுரேஷுடன் இருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது கீர்த்தி தனது ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளார்.