Worldometers இணையத் தளத்தின் சமீபத்திய அதிகாரப்பூர்வ தகவல் படி உலகம் முழுதும் 213 நாடுகளில் பரவியிருக்கும் கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முக்கிய புள்ளி விபரம் கீழே :

உலகளாவிய ரீதியில்,

மொத்த தொற்றுக்கள் : 5 149 260
மொத்த இறப்புக்கள் : 331 950
குணமடைந்தவர்கள் : 2 055 127
ஆக்டிவ் தொற்றுக்கள் : 2 762 183
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 45 922

நாடளாவிய புள்ளி விபரம் :

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 1 603 926 : மொத்த இறப்புக்கள் : 95 501
ரஷ்யா : 317 554 : 3099
பிரேசில் : 296 033 : 19 148
ஸ்பெயின் : 279 524 : 27 888
பிரிட்டன் : 250 908 : 36 042
இத்தாலி : 228 006 : 32 486
பிரான்ஸ் : 181 575 : 28 132
ஜேர்மனி : 178 864 : 8273
துருக்கி : 153 548 : 4249
ஈரான் : 129 341 : 7249
இந்தியா : 118 222 : 3584
பெரு : 104 020 : 3024
சீனா : 82 967 : 4634
கனடா : 81 277 : 6145
பாகிஸ்தான் : 48 091 : 1017
சுவிட்சர்லாந்து : 30 694 : 1898
ஜப்பான் : 16 385 : 771
தென்கொரியா : 11 122 : 264
இலங்கை : 1047 : 9

இன்றைய புள்ளி விபரப்படி உலகளவில் மொத்த தொற்றுக்கள் 51 இலட்சத்தைக் கடந்தும், மொத்த இறப்புக்கள் 3 இலட்சத்து 31 ஆயிரத்தைக் கடந்தும் உள்ளன. மிக அதிகபட்சமாக அமெரிக்காவில் 16 இலட்சத்துக்கும் அதிகமான தொற்றுக்களும், 95 ஆயிரத்துக்கும் அதிகமான இறப்புக்களும் ஏற்பட்டுள்ளன. விரைவில் இறப்புக்களின் எண்ணிக்கையில் 1 இலட்சத்தைக் கடந்த முதல் நாடாக அமெரிக்கா வரும் சாத்தியக்கூறு உள்ளது.

உலகளவில் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் 1 இலட்சத்துக்கும் அதிகமான கொரோனா தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளன. இங்கிலாந்து உட்பட பல ஐரோப்பிய நாடுகள் ஊரடங்கு நடவடிக்கைகளைப் படிப்படியாக எளிதாக்கி வரும் நிலையில் இது ஒரு அதிர்ச்சியான புள்ளி விபரம் தான். ஏற்கனவே கொரோனா தொற்றின் 2 ஆவது அலை குறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையில், சமூக இடைவெளியை அனைத்து நாடுகளும் வலியுறுத்திய வண்ணமே உள்ளன. ஆனாலும் சில ஐரோப்பிய நாடுகளில், உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் பூங்காக்கள் திறக்கப் பட்டுள்ளன.