சீனாவின் வுகான் நகரில் 2019- ஆம் ஆண்டு முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ்,  இன்னும் கட்டுக்குள் வந்தபாடில்லை. வைரஸ் பரவல் சற்று குறைவதும் பின்னர், அடுத்த அலையாக பரவுவதும் என இன்னமும் வைரஸ் உலக மக்களை அச்சுறுத்தியபடியே உள்ளது.

தடுப்பூசி போடும் பணி ஒரு பக்கம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.  எனினும் வைரஸ் பரவலும் கட்டுக்குள் வந்தபாடில்லை. 

இந்நிலையில், பிரான்சில் கொரோனா வைரசின் 3-வது அலை பரவியிருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கடந்த நவம்பர் மாதத்திற்கு பிறகு முதல் முறையாக கடந்த 7 நாட்களாக புதிய கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருவதாக பிரான்சு அரசு அறிவித்துள்ளது.