தன்னுடைய கணவனை அவருடைய வீட்டுக்குள் வைத்தே படுகொலைச் செய்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், தாயும் மேலும் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் லுணுவில கொஸ்வத்தையில் இடம்பெற்றுள்ளது.
தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாகவே அந்தப் பெண், தன்னுடைய கணவனை படுகொலைச் செய்துள்ளார்” என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
44 வயதான நபரே, 38 வயதான பெண்ணினால் படுகொலைச் செய்யப்பட்டுள்ளார். அப்படுகொலைக்கு படுக்கை விரிப்பே பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்தவேளை அவ்விருவரின் மூன்று பிள்ளைகளும் பொலிஸ் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.