யாழ். மாவட்டத்தில் மேலும் 143 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று சனிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களில் திருநெல்வேலி பொதுச் சந்தை தொகுதி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் 127 பேர் அடங்குவதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பபாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடம் ஆகிய ஆய்வுகூடங்களில் 746 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.
இதில் 143 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.