இந்தியாவில் உள்ள அனைத்து மொழி திரைப்படங்களுக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது தான் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் பல சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக இசையமைப்பாளர் விருது விஸ்வாசம் படத்திற்காக இமானுக்கு கிடைத்ததுதான் பெரும் பேசுபொருள் ஆகியுள்ளது.
இமான் நல்ல இசையமைப்பாளர் தான். அதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. இருந்தாலும் ஒரு கமர்ஷியல் படத்தை வைத்து எப்படி சிறந்த இசையமைப்பாளர் என்று கணித்தார்கள் என்று கோலிவுட்டில் கிசுகிசு எழுந்துள்ளது.
இது ஒருபுறமிருக்க தளபதி விஜய் படங்கள் ஏன் தேசிய விருதுகளுக்கு தகுதி பெறவில்லை என்பது போன்ற வாதங்களும் அதிகமாகி உள்ளது. அதற்கு சிலர் தற்போது இருக்கும் அரசியல் வாதிகளையும் அரசாங்கத்தையும் குறை கூறுகின்றனர்.
அதாவது தளபதி விஜய் தொடர்ந்து அரசியலுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருவதால் விஜய் எவ்வளவு நல்ல படங்கள் நடித்தாலும் அதை புறக்கணிக்கின்றனர் என்றும் கூறுகின்றனர். அதிலும் கடந்த சில வருடங்களில் விஜய் நடிப்பில் வெளியான கத்தி, சர்கார் போன்ற படங்கள் மக்களுக்கான நல்ல கருத்தை அடிப்படையாக வைத்து வெளியான திரைப்படங்கள் தான்.
அதுமட்டுமில்லாமல் விஜய் படங்களுக்கு தமிழ்நாடு அரசு விருது கொடுத்தும் பல வருடங்கள் ஆகிவிட்டது. கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக விஜய்க்கு அரசியல் ஆசை இருந்து வருவதுதான் இதற்கெல்லாம் காரணம் எனவும் ஒரு கூட்டம் பேச ஆரம்பித்துள்ளது.
ஆக மொத்தத்தில் விஜய் எந்த ஒரு அரசாங்கத்தையும் எதிர்த்துப் பேசாமல் அவர்கள் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தால் அவருக்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்பது போல கருத்துக்கள் விஜய் ரசிகர்களிடையே அதிகம் பரப்பப்பட்டு வருகிறது.