2019 ஏப்ரல் முதல் 2020 மார்ச் மாதம் வரை நாட்டில் ஒரு லட்சத்து 85ஆயிரம் கோடி மதிப்பில் 84ஆயிரத்து 545 வங்கி மோசடி வழக்குகள் பதிவாகி உள்ளன என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி அளித்த பதிலில்,2019-20-ஆம் நிதியாண்டில் வர்த்தக வங்கிகளில் 84 ஆயிரத்து 545 நிதி மோசடிகள் நடைபெற்றுள்ளன என்றும் அவற்றின் மதிப்பு 1 லட்சத்து 85ஆயிரத்து 772 கோடி ரூபாயாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆயிரத்து 783 கோடி ரூபாய் மதிப்பிலான மோசடியில் 2ஆயிரத்து 668 வங்கி ஊழியர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.