பொதுவாக கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் வலிகள் ஏற்படுவது வழக்கம். இதற்கான காரணம் குழந்தை வளரும் போது குழந்தைக்கு ஏற்றவாறு உடலமைப்பு மாறும் போது இந்த வலி வரும்.
இதற்கு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் கர்பமாக இருக்கும் போது அடி வயிற்றில் வலி ஏற்பட்டால் அது ஏதாவது ஒரு பிரச்சனையின் அறிகுறியாக இருக்கும். அது எந்தெந்த பிரச்சனை என்பதை பார்க்கலாம்.
நீங்கள் கர்பமாகி முதல் 2 அல்லது 6 வாரங்களுக்குள் உங்களுக்கு மாதவிடாய் வருவது போல வலி ஏற்பட்டால் அது கரு உருவாகுவதற்கான வலி ஆகும்.
இது சாதரண விஷயமாகும். இது தவிர ஹோர்மோன் பிரச்சனைகளாலும் இந்த பிரச்சனை வரும். கருவானது கரு முட்டையில் இல்லாமல் பலோப்பியன் குழாயில் இருந்தால் அதுக்கடி வயிற்றில் பலத்த வலியை ஏற்படுத்தும்.
இதனால் உடனடியாக நீங்கள் வைத்தியரை அணுகி கருவை கலைத்து விட வேண்டும். இது நாளடைவில் குழந்தை வளர்வதற்கேற்றவாறு குழாயும் வளர்வதால் வலி அதிகரிக்கும்.
கர்ப்பமாக இருக்கும் போது வலியுடன் கூடிய ரத்தப்போக்கு ஏற்பட்டால், அது கருச்சிதைவிற்கான அறிகுறியாகும். சிலருக்கு குறைப்பிரசமாக இருந்தாலும் அடிவயிற்றில் வலி ஏற்படும்.
நஞ்சுக்கொடி சிதைவு என்பது உயிருக்கு ஆபத்தான நிலை. இதில் குழந்தை பிறப்பதற்கு முன்பே நஞ்சுக்கொடி கருப்பையிலிருந்து பிரிந்துவிடும்.
இந்த நேரத்தில் நமது உடல் அடி வயிற்றில் கடும் வலியுடன் காட்டி கொடுக்கும். எனவே கருதரித்த பெண்கள் அடி வயிற்று வலி வரும் போது வைத்தியரை நாடி அறிவுரைகளை பெற்று கொள்வது அவசியம்.