நேற்றைய தினம் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட 307 கொவிட் தொற்றாளர்களுள் அதிகமானோர், அதாவது 50 பேர் கொழும்பு மாவட்டத்திலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாக Covid-19 வைரஸ் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு, மாத்தறை மாவட்டத்திலிருந்து 49 பேரும், கம்பஹா மாவட்டத்திலிருந்து 47 பேரும், இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து 42 பேரும், காலி மாவட்டத்திலிருந்து 34 பேரும் மற்றும் மாத்தளை மாவட்டத்திலிருந்து 19 பேரும் நேற்றைய தினம் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், அம்பாறை மாவட்டத்திலிருந்து 9 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து 7 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து 5 பேரும் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து 3 பேரும் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், அம்பாந்தோட்டை, வவுனியா, பதுளை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலிருந்து தலா 2 தொற்றாளர்கள் வீதமும், கண்டி, புத்தளம், கேகாலை, நுவரெலியா மற்றும் மொனராகலை மாவட்டங்களிலிருந்து தலா ஒரு தொற்றாளர் வீதமும் நேற்றையதினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏனைய 25 பேரும் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்களாவர்.
நேற்றைய தினம் தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்
