மேஷம்

செல்வநிலை உயரும் நாள். திடீர் முன்னேற்றம் உண்டு. பாசத்தோடு பழகியவர்கள் பக்கபலமாக இருப்பர். இடமாற்றச் சிந்தனைகள் உருவாகும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர்.

ரிஷபம்

பிள்ளைகளால் பெருமை சேரும் நாள். முன்னோர் வழிச்சொத்துகள் கிடைப்பதில் இருந்த தடைகள் அகலும். நட்பால் நல்லகாரியம் நடைபெறும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

மிதுனம்

நினைத்தது நிறைவேறும் நாள். எதையும் ஒளிவு மறைவின்றி சொல்வீர்கள். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பர். உடன்பிறப்புகள் உங்கள் பணிக்கு உறுதுணையாக விளங்குவர்

கடகம்

கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். நண்பர்களுடன் ஏற்படும் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. சுதந்திரமாக எதையும் செய்ய இயலாது. அலுவலகத்தில் மேலதிகாரிகளின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும்.

சிம்மம்

நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும் நாள். நண்பர்களின் நல்லாதரவு உண்டு. குடும்ப உறுப்பினர்களால் உதிரி வருமானங்கள் வந்து சேரும். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும்.

கன்னி

விரயங்கள் அதிகரிக்கும் நாள். வீடு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்

துலாம்

முயற்சியில் அனுகூலம் ஏற்படும் நாள். அருகில் உள்ளவர்களின் ஆதரவு கூடும். குடும்பத்தில் பெரியவர்களோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். குழந்தைகளின் முன்னேற்றம் கருதி முக்கிய  முடிவெடுப்பீர்கள்.

விருச்சகம்

முன்னேற்றம் கூட முன்னோர்களை வழிபட வேண்டிய நாள். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. பக்கத்து வீட்டாருடன் இருந்த பகை மாறும். துணிந்து சில காரியங்களைச் செய்வீர்கள்

தனுசு

பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். குடும்பத்தில் அமைதி கூடும். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டு. வாகன மாற்றச் சிந்தனை மேலோங்கும்

மகரம்

அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும் நாள். தாமதப்பட்ட காரியங்கள் இன்று துரிதமாக நடைபெறும். தொழில் முன்னேற்றம் உண்டு. வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை.

கும்பம்

பிரச்சினைகள் தீரும் நாள். பிடிவாத குணத்தை மாற்றியமைத்துக்கொள்வது நல்லது. பிள்ளைகளின் திருமண காரியங்கள் கைகூடும். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு திருப்தி தரும். சகோதர அனுகூலம் உண்டு.

மீனம்

தடைகள் அகலும் நாள். தனவரவு திருப்தி தரும். தக்கசமயத்தில் நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.